Subscribe Us

header ads

இந்தியாவிலும் விமானம் விபத்தில் வீழ்ந்தது: பயணித்தவர்கள் பலி

இந்திய இராணுவ விமானம் சி–130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் மத்திய பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலியானார்கள்.
 
 இந்திய விமானப்படைக்கு சொந்தமான இந்த விமானம் இன்று காலை 10 மணியளவில் பயிற்சிக்காக ஆக்ரா விமான படை தளத்தில் இருந்து பறந்து சென்றது. மத்திய பிரதேசம்–ராஜஸ்தான் மாநில எல்லையான குவாலியர் அருகே பறந்து சென்ற போது அந்த விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.
 
அதில் பயணம் செய்த 5 பேரும் பலியாகியுள்ளனர். தகவல் அறிந்த பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிடம் இருந்து இந்த ரகத்தை சேர்ந்த விமானங்களை இந்திய விமானப்படை ரூ.6 ஆயிரம் கோடிக்கு வாங்கியமை குறிப்பிடத்தக்கது
 
 
இவ்விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விபரம் வெளியாகவில்லை. தற்போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன   

Post a Comment

0 Comments