Subscribe Us

header ads

புத்தளத்தில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

  ரூசி சனூன்  புத்தளம் 
      இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கட்டார் நாட்டின் அல்  ஈத்   அமைப்பு  மற்றும் அல்பசர் அமைப்பு ஆகியவற்றின் அனுசரணையோடு கண்களில் வெள்ளை படர்தளுக்குள்ளானவர்களுக்கான  இலவச கண் சத்திர சிகிச்சை முகாம் செவ்வாய்கிழமை (25) புத்தளம்  குவைத் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இலங்கையில் 15 வது முறையாக மேற்கொள்ளப்படும்  இலவச கண் சத்திர சிகிச்சை புத்தளத்தில் எட்டாவது முறையாக மேட்கொள்ளப்படுகிறது. புத்தளத்தில் மாத்திரம்  இம்முறை 600 பேருக்கு இத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூவின மக்களும் இதில் பயன் பெற்றுள்ளனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் ஜம்மியதுஸ்ஸபாப்  திட்ட  இணைப்பாளர் சபர் சாலி, பிரதிப்பணிப்பாளர் மௌலவி தாசிம், முகாமைத்துவ பணிப்பாளர் மௌலவி ரஷீத், அல்  பசர் அமைப்பின் முகாமையாளர் பகுர்தீன் தகான், புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 
புகைபட உதவி: Puttalam Online
DSC03097 DSC03099 DSC03100 DSC03101 DSC03110
DSC03113

Post a Comment

0 Comments