Subscribe Us

header ads

சிறு பிள்ளைகள் (மனதை வருடிய வரிகள்)

சைக்கிள் பழகி………

சண்டையை போட்டு

சடுகுடு ஆடி

மரத்தில் ஏறி தொங்கி

குளிக்கப் போய்…..  கிணற்றில் தலைகுப்புற விழுந்து

கிரிக்கெட் மட்டையோடு  வெயிலில் அலைந்து

முட்டி பேர்த்து …பல் உடைத்து
ரத்தம் வர வீரத்தழும்பேந்தி

அடிபட்டு அழுது வருமோ…

விடுமுறை நாட்களில்
விளையாடப் போன சுட்டிப் பிள்ளைகள்கள்

என்ற கவலைகள்  தற்போதைய தாய்மார்களுக்கு இல்லை…..

அசையாத இடத்தில் ஆணியடித்து வைத்து  செயல் முடக்க இயந்திரமாக்கி

மூளையை மட்டும் சலவை செய்து

மாம் பிஞ்சுகளை வெம்பிக் கனிய வைக்கும்

வீடியோ கேமும்…..போகோசேனலும் …செய்த பேருதவியால்
வளரும் பிள்ளைகளுக்கு பந்தபாசம் எவ்வாறு புரியும்…

Post a Comment

0 Comments