Subscribe Us

header ads

சாஸ்திரம் பார்ப்பதற்காகச் சென்ற யுவதி.. ஆனமடு சாமியாரின் நடவடிக்கையால் போலீசில் தஞ்சம்.

சாஸ்திரம் பார்ப்பதற்காகச் சென்ற யுவதியொருவரை நிர்வாணப்படுத்தி அந்த யுவதியின் உடலில் நோய் தேடிய சாமியார் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஆணமடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சாமியாரிடமிருந்து தப்பி ஓடிய மேற்படி யுவதி, பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சாமியாரிடம் சாஸ்திரம் பார்ப்பதற்காக 27 வயது யுவதியொருவர் சென்றுள்ளார். அந்த யுவதி ஏதோவொரு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ள சாமியார், அந்த நோய் யாதென கண்டுபிடிப்பதாகக் கூறி யுவதியை நிர்வாணப்படுத்தியுள்ளார்.

சாமியாரின் இந்த நடவடிக்கையிலிருந்து தப்பிக்கொண்ட யுவதி, அவ்விடத்திலிருந்து ஓடிச்சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே, அந்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வரும் ஆணமடுவை பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments