Subscribe Us

header ads

எம்.எச். 370 விமானத்தில் எவரும் உயிர் தப்பியிருக்கலாம் என்ற நம்பிக்கையை இழந்துவிடவில்லை என்கிறது மலேஷியா

காணாமல் போன எம்.எச்.370 விமானத்திலிருந்தவர்கள் எவரேனும் உயிர் தப்பியிருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை இழந்துவிடவில்லை என மலேஷிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட இவ்விமானம் இந்து சமுத்திரத்தின் தெற்கில் வீழ்ந்துவிட்டது எனவும் இதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டனர்  எனவும் முடிவுக்கு வரவேண்டியுள்ளதாக மலேஷியா கடந்த 25 ஆம் திகதி  உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

எனினும், பயணிகளின் உறவினர்களை இன்று சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மலேஷிய  போக்குவரத்துத் துறை பதில் அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூஸைன்,  239 பேரில் எவரேனும் உயிர் தப்பியிருக்கலாம் என்ற நம்பிக்கையை இழந்துவிடவிலலை என அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கையாக, நாம் பிரார்த்திப்பதுடன், உயிர் தப்பியிருக்கக் கூடியவர்களை கண்டுபிடிக்கும் வரை எமது தேடதல்கள் தொடரும் என அவர் கூறினார்.

"இக்குடும்பங்களுக்கு என்னால் போலி நம்பிக்கையை ஏற்படுத்த முடியாது. எம்மால் செய்ய முடிந்ததெல்லாம் பிரார்த்திப்பதுடன், எவரேனும் உயிர்தப்பியிருப்பதற்கான சிறிய சாத்தியங்கள் இருந்தால்கூட  தேவையான அனைத்தையும் நாம் செய்வோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments