Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று மார்ச் 26

1169:  எகிப்தின் முதலாவது சுல்தானாக சலாதீன் பதவியேற்றார்.

1199:  இங்கிலாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட் பிரான்ஸை முற்றுகையிடும்போது படுகாயமடைந்தார். 11 நாட்களின் பின்னர் இவன் இறந்தார்.

1431 : பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமாகின.

1812 : வெனிசுவேலாவின் கரக்காஸ் நகர் பூகம்பத்தால் அழிந்தது.

1871 : இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.

1917 : முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்ற சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.

1934 : பிரிட்டனில் வாகன சாரதிகளுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.

1942 : இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுஷ்விட்ஸ் சித்ரவதை முகாமில் முதற்தடவையாக பெண்கள் சிறைக்கைதிகளாயினர்.

1945 : இரண்டாம் உலகப் போர்: ஜப்பானுடனான இவோ ஜீமா சமர் முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.

1953 : ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.

1958 : ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.

1971 : கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரமடைவதாக அறிவித்தது. பங்களாதேஷ் சுதந்திரப் போர் ஆரம்பமானது.

1975: உயிரியல் ஆயுத சமவாயம் அமுலுக்கு வந்தது.

1979 : இஸ்ரேல்-எகிப்து சமாதான ஒப்பந்தம் வோஷிங்டனில் கைச்சாத்தானது. ஏகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத், இஸ்ரேலிய பிரதமர் பெகின், அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.

1985: ஐரோப்பாவில் ஷெங்கன் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.

1997 : சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.

1998 : அல்ஜீரியாவில் 2 வயதுக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

2006 : மியான்மாரின் புதிய தலைநகராக நய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ
ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

2000 : ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் முதற் தடவையாக ஜனாதிபதியாக முதற்தடவையாக தெரிவானார்.

2006 : முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

2010: தென்கொரிய கடற்படைக் கப்பலொன்று மஞ்சள் கடலில் விபத்துக்குள்ளானதால் 46 கடற்படையினர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments