சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக
தொழில் புரிந்து வந்த இலங்கை பெண்ணொருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1200
கசையடிகள் மற்றும் 12 வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
இலங்கை பெண் தான் பணியாற்றி வீட்டில் கொள்கையிட்டதாக குற்றம்
சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்த தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கே இந்த தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஜெத்தாவில் உள்ள மலாஸ் சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது
மனைவியை விடுதலை செய்ய உதவுமாறு பெண்ணின் கணவர் அதிகாரிகளிடம் கோரிக்கை
விடுத்துள்ளார்.

0 Comments