Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: மார்ச் 05

1496: இங்கிலாந்து மன்னன் 7 ஆம் ஹென்றி, கண்டுபிடிக்கப்படாத புதிய நிலப்பரப்புகளை கண்டறிவதற்கான உரிமையை இத்தாலிய கடலோடி ஜோன் காபோட்டுக்கும் தனது மகன்களுக்கும் வழங்கினான்.

1770 – அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1793 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.

1824 -  பர்மாவின் மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர்.

1912: துருக்கியின் மீது இத்தாலிய படையினரின்  விமானங்கள் பறந்தன. இராணுவ நடவடிக்கையில் விமானங்கள் பயன்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

1931: அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் உப்பை வறிய மக்கள் சுதந்திரமாக பயன்படுத்துவதற்கும் அனுமதியளிக்கும் உடன்படிக்கையில் இந்தியாவுக்கான பிரித்தானிய ஆளுநர் எட்வர்ட் பிரெட்ரிக் லின்ட்லேயும் மகாத்மா காந்தியும் கையெழுத்திட்டனர்.

1933: ஜேர்மனியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அடோல்வ் ஹிட்லரின் நாஸி கட்சி 43.9 சதவீத வாக்ககுளைப் பெற்று வெற்றியீட்டியது.

1940 - சோவியத் உயர்பீடம் 25,700 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கும் உத்தரவில்  கையொப்பமிட்டது.

1946: பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் 'இரும்புத் திரை' எனும் வார்த்தையை முதல் தடவையாக பயன்படுத்தினார்.

1960: மார்க்ஸிஷ புரட்சியாளர் சே குவேராவின் புகழ்பெற்ற புகைப்படமொன்றை மரணச்சடங்கொன்றின்போது கியூப புகைப்படக்கலைஞர் அல்பர்ட்டோ கோர்டா பிடித்தார்.

1966: ஜப்பானில் இடம்பெற்ற விமான விபத்தில் 124 பேர் உயிரிழந்தனர்.

1970: அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தம் 43 நாடுகளால் கையெழுத்திடப்பட்டு அமுலுக்கு வந்தது.

1982: சோவியத் யூனியனின் வெனேரா 14 விண்கலம் வெள்ளி கிரகத்தில் தரையிறங்கியது.

2008 – மாங்குளத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் கொல்லப்பட்டார்.

2003: இஸ்ரேலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments