Subscribe Us

header ads

கோலாகல திருவிழா! உயிரோடு நபரை புதைக்கும் மக்கள்

கியூபாவில் உயிருடன் இருக்கும் நபரை சவப்பெட்டியில் வைத்து புதைப்பது போன்ற திருவிழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கியூபாவின் கவானா நகரில் உள்ள கிராமம் Santiago de las Vegas.

இங்கு கடந்த 1984ம் ஆண்டில் இருந்து பிப்ரவரி மாதம் 5ம் திகதி Burial of Pachencho என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் உயிருடன் இருக்கும் நபர் ஒருவரை இறந்தவர் போன்று கருதி, அவருக்கு சடங்குகளை மக்கள் செய்கின்றனர்.

முதலில் இதற்காக நாடக குழுவில் இருந்து நபர் ஒருவரை தெரிவு செய்கின்றனர்.

பின் இவரை சவப்பெட்டியில் வைத்துக் கொண்டு ஊர் முழுவதும் சுற்றி வருகின்றனர்.

அப்போது ஆட்டம், பாட்டம் என மது அருந்தி கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தெருக்களை சுற்றி வருகின்றனர்.

முடிவில் கல்லறையில் வந்து சவப்பெட்டியுடன் குறித்த நபரை புதைத்து விடுகின்றனர்.

அனைத்து சடங்குகளும் முடிந்த பின் அந்த நபர் மீண்டும் எழுந்து வருகிறார், தான் புதிதாக பிறந்தவர் போன்று உணர்வதாக தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments