டுபாயில் பெற்றோரால் கை விடப்பட்ட இலங்கை பெண் குழந்தை ஒன்றுக்கு மனித
உரிமைகளுக்கான திணைக்களம், சிறுவர் மற்றும் பெண்களுக்கான டுபாய் பவுண்டேசன்
ஆகியன அடைக்கலம் கொடுத்து உள்ளன.
குழந்தைக்கு வயது 04. இலங்கைத் தந்தை ஒருவருக்கும், பிலிப்பைன்ஸ் தாய்
ஒருவருக்கும் திருமணத்துக்கு அப்பால் பட்ட உறவு மூலம் பிறந்தது.
நிதி மோசடி வழக்கு ஒன்றில் தகப்பன் சிறையில் உள்ளார். கர்ப்பத்தை
தொடர்ந்து நாட்டுக்கு சென்ற பிலிப்பைன்ஸ் பெண் அடிக்கடி திரும்பி வந்தார்
என்றும் குழந்தையை அயலில் உள்ள எமிரேட்ஸ் ஒன்றில் பெற்று விட்டு சென்றார்
என்றும் தெரிகின்றது.
குழந்தையுடன் இலங்கைப் பெண் ஒருவர் திணைக்களத்துக்கு வந்து, சொந்த
இயலாமையை சொல்லி, குழந்தையை திணைக்களம் பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டு
இருக்கின்றார். இவர் குழந்தையின் அயலவர் ஆவார்.
திணைக்கள அதிகாரிகள் இவர் வழங்கிய தகவலின் குழந்தையின் தந்தையை சிறையில் சந்தித்து மேலதிக தகவல்களை பெற்றனர்.
குழந்தையின் பிறப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்களையும் பிலிப்பைன்ஸ்
தாய் கொண்டு சென்று விட்டார். குழந்தையின் தந்தை வேலை அற்றவர். இவருக்கு
விசா முடிவுற்று விட்டது.
இந்நிலையில் குழந்தையின் பிறப்பு ஆவணங்களை வைத்தியசாலை வட்டாரங்கள் மூலம் கண்டு பிடிக்கின்ற முயற்சியில் திணைக்களம் ஈடுபட்டு உள்ளது.

0 Comments