Subscribe Us

header ads

மனித மாமிசம் விற்பனை செய்த உணவு விடுதி உரிமையாளர் கைது

நைஜீரியாவில் மனித மாமிசத்தை விற்பனை செய்ததாக உணவு விடுதி உரிமையாளர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் அனம்ப்ரா மாநிலத்தில் உள்ள ஒனிட்ஷா நகரில் இருக்கும் உணவகம் ஒன்றில் மனித மாமிசம் சமைத்து விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு வந்த தகவலை அடுத்து, பொலிஸார் நேற்று காலை அந்த உணவகத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஹோட்டலில் மனித மாமிசம் சமைத்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஹோட்டலில் 2 பிளாஸ்டிக் பைகளில் 2 மனித தலைகள் இருந்ததை கண்டனர்.

இது தொடர்பாக உணவக உரிமையாளர், 6 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என மொத்தம் 11 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

Post a Comment

0 Comments