Subscribe Us

header ads

உலக குழந்தைகள் நோபல் பரிசுக்கு மலாலா பெயர் பரிந்துரை

பாகிஸ்தான் மாணவி மலாலா பெயர் குழந்தைகளுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடிய மாணவி, மலாலாவை, 2012ல், தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

லண்டனில் தீவிர சிகிச்சைக்கு பிறகு, உயிர் பிழைத்த மலாலா, உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது, 16 வயதாகும் மலாலாவுக்கு, ஐரோப்பிய யூனியனின், "ஷெக்ரோவ் மனித உரிமை விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது, குழந்தைகளுக்கான நோபல் பரிசாகக் கருதப்படும், சுவீடனின், "உலக குழந்தைகள் பரிசுக்கு, மலாலாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

"மலாலா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடி வருவதால், இந்தப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது´´ என சர்வதேச விருது கமிட்டி தலைவர், லிவ் ஜெய்ல்பர்க் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments