Subscribe Us

header ads

வெற்றியை நோக்கி சென்ற பாகிஸ்தான் அணியை நிலை குலைய வைக்கும் லசித் மாலிங்க. (வீடியோ இணைப்பு)

நேற்றிரவு ஆசிய கிண்ண கிரிக்கெட் முதலாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 12 ஓட்டங்களால் தோற்கடித்து அறிந்ததே..

இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல
விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

வெற்றியை நோக்கி சென்ற பாகிஸ்தான் அணியை  இலங்கை அணியின் லசித் மாலிங்கவின் அபாரமான பந்து வீச்சு (9.5 ஓவர்கள் பந்துவீசி 52 ஓட்டங்களைக் கொடுத்து 5*விக்கெட்களை வீழ்த்தி) நிலை குலையச் செய்தது இலங்கை ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

Post a Comment

0 Comments