அமெரிக்காவின் இலாப நோக்கற்ற நிறுவனமொன்று உலகெங்குமுள்ள அனைவருக்கும் இணையத்தளத்தை இலவசமாகப் பயன்படுத்த அவுட்நெட் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
நியூயோர்க்கை மையமாகக் கொண்டு இயங்கும் ஊடக அபிவிருத்திக்கான முதலீட்டு நிதியம் என்ற அமைப்பு பரிந்து ரைத்திருக்கும் திட்டத்தில் நூற் றுக்கணக்கான சிறிய செய்மதிகள் நிறுவுவதன் மூலம் அனைவ ருக்கும் இலவசமாக தொலை பேசி மற்றும் இணையத்தள வசதிகளைப் பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிக செலவு காரணமாக உலகில் இன்றும் 40 வீதமானோர் இணையத்தள வசதியை பெற முடியாதிருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சைபீரியாவி லிருந்து பின்தங்கிய ஆபிரிக்க கிராமத்திற் கும் இணையத்தள வசதியைப் பெற முடியுமாக இருக்கும். இந்த அவுட்நெட் தொழில்நுட்பத்தின் மூலம் உலகெங்கும் வலம்வரும் செய்மதி ஊடாக இணையத்தளத்தை வழங்கு முடியும்.
இதில் "கியூப்ஸாட்" என்னும் சிறுசிறு விண்கலங்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு கம்பியில்லா இணைய வசதியைத் தோற்றுவிக்கும். இதன் மூலம் உலகத்தின் எந்த மூலையிலும் இலவச இணையத்தளத்தை பெற முடியுமாகும். இந்நிறுவனம் இதற்கான வேலைகளில் விரைவாக ஈடுபட்டு வருகிறது. வரும் ஏப்ரலில் இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்க உள்ளன.
எனினும் இவ்வாறான வலையமைப்பை உருவாக்குவது இலகுவானதல்ல என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதற்கான செய்மதிகளை அமைத்து நிறுவுவதற்கு 100,000 முதல் 300,000டொலர் வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
0 Comments