Subscribe Us

header ads

தாய் தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கிய அபூர்வ சம்பவம் சுவீடனீல்

தனது தாய் தானமாக வழங்கிய கருப்பை மூலம் குழந்தை ஒன்றை பெறபோகும் முதல் பெண் என்ற பெருமையை சுவீடன் நாட்டு பெண்ணொருவர் பெறப்போகின்றார்.

சுவீடனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறவியிலேயே கருப்பை இல்லை. இதனையடுத்து குறித்தப் பெண் வளர்ந்து பெரிவளானதும் அவரது தாய் தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கினார்.
எனவே, தாயிடம் இருந்த கருப்பை அகற்றப்பட்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணின் வயிற்றில் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 9 பெண்களுக்கு இதுபோன்ற சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் அவர்களில் இப்பெண்ணுக்கு மாத்திரமே கருப்பை சீராக செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் இப் பெண்ணின் உடலில் உருவான முட்டையை வெளியே எடுத்து செயற்கை முறையில் கருத்தரிக்க செய்தனர்.

பின்னர் அந்த கரு முட்டையை உடல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட கருப்பையில் பத்திரமாக வைத்தனர். தற்போது அக்கருமுட்டை வளர்ச்சி அடைய தொடங்கி விட்டது.

எனவே, கர்ப்பிணியான குறித்தப் பெண் ஒரு குழந்தையை பெற உள்ளார். இதன் மூலம், உலகிலேயே உடல் உறுப்பு மாற்று கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெறவுள்ளார்.

எனினும் குறித்தப் பெண்ணின் பெயரை வெளியிட மறுத்துள்ளடை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments