நிர்மாண வேலைகள் அடுத்தாண்டு இறுதியில் பூர்த்தி!
பல்வேறு பரிவர்த்தனை நிலையங்களை கொண்டதாக அமைக்கப்படும் இந்த தாமரைத் கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான தாமரைத் கோபுரமாகவும் திகழவிருக்கிறது.
அத்துடன் இந்த நாட்டினது மட்டுமல்ல குறிப்பாக கொழும்பு மா நகரின் அழகின் சின்னமாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. புpரான்ஸில் அமைந்துள்ள ஐFஃபல் கோபுரம் 324 மீட்டர் உயரமுடையது. அதைவிட இலங்கையில் நிர்மாணிக்கப்படும் தாமரைத் கோபுரம் இந்த ஐஃபல் கோபுரத்தை விடவும் 26 மீட்டர் உயரமானதாகும்
எனவே, உலகிலேயே உயரமான கோபுரங்களில் இந்த தாமரைத் கோபுரம் ஐந்தாவது இடத்தை வகிக்கும் தொலை தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.
தொலை தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவுக்காக கொழும்பு டீ.ஆர் விஜேவர்த்தன மாவத்தையில் நிர்மாணிக்கப்படு வரும் இந்த தாமரைத்கோபுரத்துக்கான ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104.3அமெரிக்க டாலர்களாகும்.
தற்சமயம் இந்த கோபுரத்தின் நிர்மாண வேலைகள் இரண்டு லட்சம் சதுரஅடி அளவில் பூர்த்தியடைந்துள்ளன. எதிர்காலத்தில் இதன் நிர்மாண வேலைகள் வாரத்துக்கு ஐந்து மீட்டர் என்ற அடிப்படையில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்ப கட்ட நிர்மாண வேலைகள் நிறைவு பெற்றதுடன் இரண்டாம் கட்ட வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும். இதில் 1500 வாகனங்களை ஒரே தடவையில் நிறுத்தி வைக்கக் கூயதாக பாரிய வாகன தரிப்பிடம் ஒன்றும் வர்த்தக கட்டடத் தொகுதியும் நிர்மாணிக்கப்படும்.
இலங்கையின் அபிமானத்தையும் வளத்தைளும் பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்படும் இந்த தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகளை இரண்டு பிரதான சீன கம்பனிகள் (China National Electronics Import and Export Corporation (CEIEC) , Aerospace Long-March International Trade Co. Ltd (ALIT) பொறுப்பேற்றுள்ளன .
.இதன் நிர்மாண வேலைகள் 2012ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன.இக்கோபுரத்தின் நிர்மாண பணிகள் அடுத்த இறுதியில் நிறைவு செய்யப்படும்.மொரட்டுவை பல்கலைக்கழக கட்டடக் கலைஞர்கள் மற்றும் உள்ளுர் கட்டடக் கலைஞர்களின் பூரண ஒத்துழைப்பும் இதன் நிர்மாண வேலைகளுக்காக கிடைக்கின்றன.
வானொலி மற்றும் தொலைகாட்சிகளுக்காக 350 மீட்டர் உயரமான பரிவர்த்தனை கோபுரங்கள் இங்கு அமைக்கப்படும் . அங்கு கண்காணிப்பு கூடம் உல்லாச ஹோட்டல்கள் தொலை தொடர்பு பரிவர்த்தனை நிலையங்கள் அனைத்தும் உள்ளடக்கியதாகவே இந்த தாமரைத் கோபுரம் அமைக்;கப்படவுள்ளது என தொலை தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான அனுஷ பெல்பிட்ட அனுஷ பெல்பிட்ட சுட்டிக்காட்டினார்.
10ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்படும் உத்தேச தாமரைத் கோபுர திட்டத்துக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்படும். இந்த கோபுரம் நிலத்துக்கு கீழ் நான்கு மாடிகளுடன் ஆரம்பமாகிறது.
இதில் அதிவேக மின்சார லிfஃப்ட்டுக்கள் இயங்கவிருக்கின்றன. அதிவேக மின்சார லிஃப்டுகள் பொருத்தப்படுவதால் 85 முதல் 90 வரையிலான மாடிகளுக்கு சுமார் இரண்டே இரண்டு நிமிட குறுகிய நேரத்தில் சென்று விடலாம் .
நிலத்துக்குக் கீழான நான்கு மாடிகள் நிர்மாணிக்கப்பட்டதும் இந்த கட்டடம் ஒரு சிலின்டரின் வடிவத்தில் காணப்படும் அது 270 மீட்டர் வரை அதாவது 85 அல்லது 90 மாடிகள் வரை உயரும் தாமரைப் பூவின் வடிவில் வரும் கோபுரத்தில் ஒன்பது மாடிகள் உள்ளடக்கப்படும்.
இந்த ஒன்பது மாடிகளுக்கும் பார்வையாளர் கூடங்களும் அமைக்கப்படும்.இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் இலங்கை முழுவதும் மட்டுமல்ல சிலவேளை இந்தியாவை கூட பார்க்கலாம் என தொலை தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு தெரிவிக்கிறது. இதன் உச்சியிலிருந்து பெரும்பாலும் 100முதல் 150 மீட்டர் வரையிலான தொலைவிற்கு பார்க்க முடியும்
இதன் பார்வையாளர் அரங்கில் சுழலும் சிற்றுண்டிச்சாலைகளும் அமையவிருக்கிறது. அது மட்டுமல்ல, மாநாட்டு மண்டபம் திருமண மண்டபம் வரவேற்பு கூடங்களும் இதில் அடங்கும். முழுக் கொழும்பையும் ஒரே கோபுரத்தின் கீழ் பார்க்கக்கூடிய , ஆயிரம் பேர் வரை ஓரே தடவையில் அமரக்கூடிய கேட்போர் கூடமும் இங்கு அமைக்கப்படும்.
இதில் ஏனைய இரண்டு மாடிகளிலும் ஐந்து நட்சத்திர, ஆறு நட்சத்திர ஹோட்டல் அறைகள் 24ஐ உள்ளடக்கிய அதி நவீன சொகுசு ஹோட்டல்களும் அமையும்.அவ்வாறே குறைந்த பட்சம் சுமார் 50 வானொலி நிலையங்களும் 50 தொலைகாட்சி நிலையங்களும் 20 தொலைதொடர்பு சேவை நிலையங்களும் அமைப்பதற்கு இடவசதி அளிக்கப்படும்.
பாதுகாப்பு சமீக்ஞைகள் வழங்குவதுடன் கொழும்பு நகரில் பல கட்டடங்களின் மேலே தற்சமயம் நிர்மாணிக்கப்பட்டுள்ள அதி சக்தி வாய்ந்த வானொலி எப்.எம் அண்டனாக்களை அகற்றுவதற்கு இதன் மூலம் வாய்ப்பேற்படும். கோபுரத்தின் அடிபாகத்தில் தொலை தொடர்பு குறித்த நூதனசாலை ஒன்றும் நிறுவப்படும்.
உணவகம் நிருவாக அலுவலகம் மற்றும் காட்சிக் கூடம் போன்றவையும் இதில் உள்ளடக்கப்படும். இதற்குப் புறம்பாக மேலும் இதில் உள்ளடக்குவது குறித்து விசேட கமிட்டியின் சிபார்சின் படி தீர்மானிக்கப்படும் எனவும் தொலை தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகள் நிறைவு பெற்றதும் இலங்கைக்கு வரும் பயணிகளின் அதிகரிப்பதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையில் பெரும் வளர்ச்சியை காண முடியும் என்று உறுதியாக நம்பலாம்.
நன்றி: நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்


0 Comments