Subscribe Us

தப்பிக்க ஒரே வழி

(Athiff Ahmed)

முதல் அணுகுண்டை விஞ்ஞானிகள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அதன் உருவாக்கப் பணிகளை பார்த்துவிட்டு வந்த டாக்டர் ராபர்ட் ஆபன் ஹீமர்(J. Robert Oppenheimer) , அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி முன்னால் அணுகுண்டு குறித்த விபரங்களை விளக்கி கொண்டிருந்தார்.

அனைவரும் ஆர்வத்துடன் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஆபத்தான அணுகுண்டிலிருந்து தப்பித்துக் கொள்ள ஏதாவது பாதுகாப்பு கருவி இருக்கிறதா? என ஒருவர் கேட்டார்.

“இருக்கிறது” என்று சொல்லி நிறுத்தினார் டாக்டர் ராபர்ட்.

அணுகுண்டு போடப்பட்டால் மீட்சியே கிடையாது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவர் சொன்னது ஆறுதலாக இருந்தது, அனைவரும் ஆர்வத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர் அவையினரை நிதானமாக ஒருமுறை கூர்ந்து பார்த்துவிட்டு சொன்னார் அதற்கு பெயர் தான் “சமாதானம்”.

Post a Comment

0 Comments