1710 :சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படைகள் ஹெல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவிடியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
1784 : ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
1844 : பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு ஐக்கிய அமெரிக்க அமைச்சர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
1854 : ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1897 : மடகஸ்காரின் கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரெஞ்சுப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
1922 : எகிப்தின் சுதந்திரத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
1928: இந்திய விஞ்ஞானி சி.வி. ராமன், 'ராமன் விளைவை' கண்டுபிடித்தார்.
1935 : வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.
1942 : இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் யூஎஸ்எஸ் ஹூஸ்டன் என்ற கப்பல் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் ஜப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் 693 பேர் கொல்லப்பட்டனர்.
1947 : தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
1953 : ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் இரசாயன அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1958 : அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1975 : லண்டனில் மூர்கேட் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
1986 : சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டொக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்
1991 : முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.
1998 : கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது சேர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
2002 - இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற மதக் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.
2012: ஈராக்கின் அல் ஹிலாஹ் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 127 பேர் உயிரிழந்தனர்.
2013: பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
0 Comments