கிமு 660 : ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.
55 : ரோமப் பேரரசின் முடிக்குரிய பிரிட்டானிக்கஸ் ரோம் நகரில் மர்மமான முறையில் இறந்தான். நீரோ பேரரசனாவதற்கு இது வழி வகுத்தது.
1531 : இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தெரிவானான்.
1659 : சுவீடன் படைகளின் டென்மார்க் கொப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது.
1752 : ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.
1809 : ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
1814 : நோர்வேயின் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டது.
1826 : லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியானது 'லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.'
1873 : ஸ்பானிய உயர் நீதிமன்றம் முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.
1919 : பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.
1929 : இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.
1933 : ஹரிஜன் என்ற பத்திரிகையை மகாத்மா காந்தி தொடங்கினார்.
1942 : இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது.
1945 : இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது.
1953 : சோவியத் ஒன்றியம் இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
1964 :- சீனக் குடியரசு (தாய்வான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
1968 : இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.
1971 : ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.
1973 : வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது.
1979 : ஆயதுல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.
1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
1997 : டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
2008 : கிழக்குத் திமோரின் ஜனாதிபதி ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
2011: 30 வருடகாலம் எகிப்திய ஜனாதிபதியாக பதவி வகித்த ஹொஸ்னி முபாரக் ராஜினாமா செய்தார்.

0 Comments