பாணந்துறை நியூ ஸ்டார் கழகத்தின் கடும்
சவாலுக்கு மத்தியில் 4 க்கு 2 என்ற பெனல்டி முறையில் வெற்றியீட்டிய
நீர்கொழும்பு டொன் பொஸ்கோ கழகம், கார்கில்ஸ் புட் சிட்டி எவ். ஏ. கிண்ண
கால் இறுதிகளில் விளையாடுவதற்கு இரண்டாவது அணியாக
தகுதிபெற்றுக்கொண்டது.
சிட்டி லீக் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற இப் போட்டியில் டொன்
பொஸ்கோ சார்பாக நிலுக் ஜனித் (7 நி.), பிரியன்கர சில்வா (49 நி)
ஆகியோரும் நியூ ஸ்டார் சார்பாக எம். ஏ. எம். ரிம்ஸான் (24 நி.), எம்.
எஸ். எம். சவ்ராஸ் (83 நி.) ஆகியோரும் கோல்களைப் போட்டனர். போட்டி
வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால் வெற்றி அணியைத் தீர்மானிக்கும்
பொருட்டு மத்தியஸ்தர் ராஜரட்னம் பிரசாந்த் பெனல்டி முறையை
அமுல்படுத்தினார். அதில் 4 க்கு 2 என டொன் பொஸ்கோ வெற்றிபெற்றது.
இதேவேளை, சீ. ஆர். மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாம் சுற்று போட்டியில்
நிகம்போ யூத் கழகத்தை 4– 3 என்ற பெனல்டி முறையில் களுத்துறை புளூ ஸ்டார்
கழகம் வெற்றிகொண்டது. இப் போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும்
தலா ஒரு கோலைப் போட்டிருந்ததால் மத்தியஸ்தர் தரங்க புஷ்பகுமார பெனல்டி
முறையை அமுல்படுத்தினார்.


0 Comments