(TM) இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கை மற்றும்
இந்தியாவில் அசாதாரண காலநிலை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்வு
கூறப்பட்டுள்ளதுடன் இருநாடுகளிலும் வெள்ள அபாயம் மற்றும் மண்சரிவுகள்
ஏற்படுவதுடன் பலமான காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலலையின் வேகம் அதிகரித்திருக்கும் என்பதுடன் திருகோணமலை, மன்னார் மற்றும்
அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த வாரமும் பெய்யும் அடைமழை அடுத்தவாரம்
செவ்வாய்க்கிழமை வரைதொடரும் என்றும் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கில் யாழ். மாவட்டத்தில் 150 மில்லிமீற்றர் மழைபெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

0 Comments