Subscribe Us

header ads

மத்திய ஆபிரிக்க குடியரசு அகதிகள் விமானங்கள் மூலம் வெளியேற்றம்

மத்திய ஆபிரிக்க குடியரசில் வன்முறைகள் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த பலர் முஸ்லிம்கள் ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

நேற்று வியாழக்கிழமை 350 பேர் சாட் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ஐ.நா. பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மத்திய ஆபிரிக்க குடியரசில் பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான மோதல்களால் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இம்மோதல்களை கட்டுப்படுத்துவதற்காக பிரெஞ்சு படையினரும் பல்வேறு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த படையினரைக் கொண்ட ஆபிரிக்க சமாதனாப் படையினரும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  எனினும் மோதல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

இதேவேளை எத்தியோப்பியாவில் நேற்று ஆரம்பமான விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டிலும் மத்திய ஆபிரக்க குடியரசு மற்றும் தென் சூடான் தொடர்பான மோதல்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments