அக்கரபத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட உருளைவெளி தோட்டத்தில் 12 வயது சிறுமியொருவரை கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கர்ப்பிணியான சிறுமி மன்றாசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் அவரை வைத்தியரிடம் அழைத்துசென்று சோதித்தபோது மகள் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மகளிடம் விசாரித்த போது நான்கு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தை பெற்றோரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்தே அக்கரைப்பத்தனை பொலிஸார் சிறுவனை கைது செய்துள்ளனர்.

.jpg)
0 Comments