Subscribe Us

header ads

புனித மக்காவின் இமாம் ஷெய்க் ஸூஹைபானி பணிநீக்கம்.

"எகிப்தில் இடம்பெறும் போராட்டம் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டமாகும். அது இஹ்வான்களுக்கு எதிரான போராட்டம் அல்ல" என கருத்து வெளியிட்டிருக்கிறார் புனித மக்காவின் இமாம் ஷெய்க் ஸூஹைபானி அவர்கள். 

"
எகிப்தில் புரட்சியைத் திட்டமிட்டவர்களும் அதற்கு நிதியுதவியளித்தவர்களும் அங்கு இடம்பெற்ற இரத்தக்களரிக்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் கிட்டும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

எகிப்தில் இடம்பெறும் போராட்டம் எந்தவொரு குழுவுக்கோ அல்லது எந்தவொரு முஸ்லிம் ஜமாஅத்துக்கோ எதிரானதல்ல. அது இஸ்லாத்திற்கு எதிராக நாஸ்திகவாதிகள் மேற்கொண்டிருக்கும் யுத்தமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

புனித மக்கா இமாமின் உரை எகிப்திய சதிப்புரட்சிக்கு அரசியல், பண ரீதியாக ஆதரவளித்த சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வ அரசியலுக்கு சவாலானாதாக கருதப்படுகிறது. 

உலகளாவிய முஸ்லிம் உம்மத்தில் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஷெய்க் ஸூஹைபானியின் இவ்வுரை முக்கியத்துவமிக்கதொன்றாக பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments