(TM) மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த தனியார் பேரூந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
மஹரகம நகர சபையின் கழிவுகளை அகற்றும் பணியாளர்களுக்கும் பேரூந்தின்
சாரதிக்கும் இடையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற மோதல்களை அடுத்தே இந்த
சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

0 Comments