Subscribe Us

header ads

மிதக்கும் புத்தகசாலை

(TM)
உலகின் முதலாவது மிதக்கும் புத்தகசாலை கப்பல் நேற்று  மாலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. பொதுமக்கள் இந்த கப்பலிலுள்ள புத்தகசாலையை நாளை முதல் புதன்கிழமை வரை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர்.

60  நாடுகளைச் சேர்ந்த 400 தொண்டர்கள் பணியற்றும் இக்கப்பலில் 5000இற்கு அதிகமான விடயங்களிலுள்ள புத்தகங்களை கட்டுப்படியான விலையில் கொள்வனவு செய்ய முடியும். 1970ஆம் ஆண்டிலிருந்து 150 நாடுகளில் இதுவரை 4 கோடி 30 இலட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்களை இந்த கப்பல் வரவேற்றுள்ளது.

வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவர்.

பிரவேச டிக்கெட் 50 ரூபாவாகும். ஆனால் 12வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கும் பாடசாலை சீருடையுடன் வரும் மாணவர்களுக்கும் பிரவேசம் இலவசம் ஆகும்.  காலி துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்த இந்த கப்பலை சிங்கள மத்திய மகா வித்தியாலயம், ஸாகிரா மகா வித்தியாலயம் மற்றும் புனித மரியாள் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் அஷ்ரப் இறங்குதுறையில் வைத்து வரவேற்றனர்.






Post a Comment

0 Comments