Subscribe Us

header ads

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பால் மற்றும் மதிய உணவு

பாடசாலை மாணவர்களுக்கு தினமும் இலவசமாக ஒரு கோப்பை பால்
மற்றும் மதிய உணவு வழங்கும் தேசிய திட்டம் நாளை (22) அநுராதபுர  விஜய மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது என கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையின் கீழ் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் பல்வேறு விசேட திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

இலங்கை முழுவதும் உள்ள 12,90,148 பாடசாலை மாணவர்களுக்கு பால் மற்றும் மதிய உணவு வழங்குவதற்கு ஆண்டுக்கு 3089.50 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் செலவிடவேண்டியுள்ளது. திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 7786 பாடசாலைகளின் மாணவர்களுக்கு பால் மற்றும் மதிய உணவு வழங்கப்படும் என்றும் அதற்காக 3290 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனூடாக பாடசாலை மாணவ மாணவியர் மத்தியில் நிலவும் போஷாக்கின்மையை 4 வீதமாக குறைக்க முடியும் என்றும் பாடசாலை வருகையை 87 வீதமாக அதிகரிக்கச் செய்ய முடியும் என்றும்  அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

திட்ட ஆரம்ப நிகழ்வில் வடமத்திய  மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே- புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகார பிரதி அமைச்சர் ஜீ. முத்துகுமாரன மற்றும் வடமத்திய கல்வி அமைச்சர் கே.எச். நந்தசேன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Post a Comment

0 Comments