Subscribe Us

header ads

அதிமேகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் தினங்கள் மை வெளிச்சம் பார்க்கப்பட்டே தீர்மானிக்கப்படுகின்றதாம்

தேர்தலை நடத்தும் தினம் மற்றும் கலைக்கும் தினங்கள் மை வெளிச்சம் பார்க்கப்பட்டே தீர்மானிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் அதனை தீர்மானிப்பதில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹெரிசன் தெரிவித்தார்.ரத்மகம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மை வெளிச்சம் மற்றும் சோதிடத்தை பார்த்த பின்னரே முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்கின்றனர்.
 
தென் மாகாண சபைத் தேர்தலுக்கு நோய் ஒன்று தொற்றியுள்ளது. தென் மாகாண சபைத் தேர்தல் மாரச் 29 ஆம் திகதியே நடைபெறும் என அந்த மாகாணத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.
 
இது பற்றி தேர்தல் ஆணையாளருக்கு தெரியாது. சில அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கேட்டு தீர்மானங்களை எடுப்பதில்லை. மை வெளிச்சம் பார்த்தே அவர்கள் தீர்மானங்களை எடுக்கின்றனர். அல்லது சோதிடர்களிடம் கேட்டு தீர்மானங்களை எடுக்கின்றனர் என்றார்.

Post a Comment

0 Comments