இணையத்தளத்தில் தேடுதலை மேற்கொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்குப்
பதிலளிக்கும் உயர் தொழில்நுட்ப பொம்மையொன்று லண்டனில் ஒலிம்பியா
கண்காட்சி நிலையத்தில் இடம்பெற்ற வருடாந்த பொம்மை கண்காட்சியில்
அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மை பிரண்ட் கல்யா' ( எனது தோழி கல்யா) என அழைக்கப்படும் மேற்படி பொம்மை,
சிறுவர்களுடன் அவர்களது பொழுதுபோக்குகள் குறித்து உ.ரையாடவும்
அவர்களது வீட்டுப் பாடங்களுக்கு உதவவும் கூடிய வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது உலகின் முதலாவது உயிர்ப்புள்ள பொம்மையாக கருதப்படுகிறது.
ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி அல்லது டப்லட் கணினி மூலம்
பயன்பாட்டாளர் கூறுவதை கிரகித்துக் கொள்ளும் இந்தப் பொம்மை, கூகுள்
இணையத்தளத்தின் சேவ்சேர்ச் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
சிறுவர்கள் கேட்கும் கேள்விக்கான விடைகளை இணையத்தளத்தில் தேடுதல்
நடத்தி கண்டுபிடித்து தெரிவிக்கிறது.
இந்த பொம்மை சிறுவர்களுக்கு புதிய தோழியாக விளங்கும் என அதனை உருவாக்கியுள்ள விவிட் நிறுவனம் தெரிவிக்கிறது.





0 Comments