Subscribe Us

header ads

காவியுடை தரித்த சில பௌத்த பிக்குகள் துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள் - பிரதமர்

போலி பௌத்த பிக்குகளை துரத்த வேண்டுமென பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் புதிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவியுடை தரித்த சில பௌத்த பிக்குகள் துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  
எவ்விதமான வாய்ப்பும் அற்ற பிழைக்க வழியில்லாத சிலர் காவியுடை தரித்து பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

காவியுடையில் மோசடிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலிக் காவியுடைத் தரித்தவர்களை படகில் ஏற்றி மஹாவலி கங்கையின் ஊடாக துரத்தியடிக்க வேண்டும்!

போலிக் காவியுடைத் தரித்தவர்களை படகு ஒன்றில் ஏற்றி மஹாவலி கங்கையின் ஊடாக துரத்தியடிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிங்கப்பிட்டிய பிரதேசத்தில் ஐந்து பிள்ளைகளைக்கு தந்தையான ஓர் பௌத்த பிக்கு பற்றிய தகவல் பதிவாகியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பௌத்த பிக்குவிற்கு குறைந்தபட்சம் இரண்டு மனைவியர் இருந்திருக்க வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பிட்டியைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் தம்மை ஹெரோயின் வர்த்தகர் என குற்றம் சுமத்தி வருவதாகவும், அந்தக் குற்றச்சாட்டு போலியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பௌத்த பிக்கு ஹெரோயின் போதைப் பொருள் அருந்தியிருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பௌத்த பிக்குகள் காவியுடையில் மறைந்து கொண்டிருப்பதனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Bookmark and Share

Post a Comment

0 Comments