Subscribe Us

header ads

'வியா­பா­ரத்தை எவ்­வாறு நேசித்து அணு­கு­கின்­றோம் என்­­ப­தி­லேயே அதன் வெற்றி தோல்வி தங்­கி­யுள்­ள­து"

(நேர்காணல்: வீ.பிரியதர்சன்)
 
வியா­பாரம் என்றால் அது ஒரு தொழில் ரீதி­யி­லான உற­வு­முறை. அதை எப்­படி நாம் நேசிக்­கின்றோம், அணு­கு­கின்றோம் என்­ப­தி­லே­யே அதன் வெற்­றி, தோல்வி தங்­கி­யுள்­ளது. இலங்­கையின் அந்­நி­யச்­செ­லா­வணி வரு­மான ஈட்­டலில் எனது நிறு­வ­னத்தின் சிறு பங்­க­ளிப்பும் உள்­ளது என்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என சிறந்த தொழில் முயற்­சி­யா­ள­ருக்­கான தேசிய விரு­தினை பெற்­றுக்­கொண்ட இளம் வர்த்­தகர் சு. வெங்­கட சரண்ய ஐயர்­ தெ­ரி­வித்தார்.
 
2012– 2013 ஆம் ஆண்­டுக்­கான ஆண்டின் சிறந்த தொழில் முயற்­சி­யா­ள­ருக்­கான விருது யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த சு. வெங்­கட சரண்ய ஐய­ருக்கு அண்­மையில் கிடைத்­தது.
இலத்­தி­ர­னியல் வர்த்­த­கத்­து­றையில் ஈடு­பட்டு குறு­கிய காலத்தில் சிறந்த தொழில் முயற்­சி­யா­ள­ராக முன்­னே­றிய அவர் வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய செவ்­வியை இங்கே தரு­கிறோம்.
 
கேள்வி:- 2012 மற்றும் 2013ஆம் ஆண்டின் சிறந்த தொழில் முயற்­சி­யா­ள­ருக்­கான தேசிய விருது கிடைத்­தமை பற்றி உங்கள் கருத்து என்ன?
 
பதில்:- இவ்­வா­றான பெரு­ம­திப்­புக்­கு­ரிய விரு­து­களை எனக்கு வழங்­கி­ய­தை­யிட்டு Federation of Chamber of Commerce Srilanka இற்கும் Asian Pacific Entrepreneur Association அமைப்­பி­ன­ருக்கும் எனது நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­வ­துடன் இவ் விரு­தினை பெற்­றுக்­கொள்ளும் தகு­தியை எனக்கு வழங்­கிய சக பணி­யா­ளர்கள், வாடிக்­கை­யா­ளர்கள் மற்றும் எனது குடும்­பத்­தி­ன­ருக்கும் இத்­த­ரு­ணத்தில் நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.
 
கடந்த 2012 ஆம் ஆண்டில் தொழில் முயற்­சி­யாளர் தரத்­திலும் Federation of Chamber of Commerce Srilanka வினால் எனக்கு வழங்­கப்­பட்­டது. அத்­துடன் 2013 நடுப்­ப­கு­தியில் Asian Pacific Entrepreneur Association இனால் வளர்ந்து வரும் தொழில் முயற்­சி­யாளர் எனும் விருது வழங்­கப்­பட்­டது. இது ஒரு சர்­வ­தேச தரத்­தி­லான விருது ஆகும். அங்கு என்­னைத்­த­விர வேறு ஒரு தமிழ் வெற்­றி­யா­ளர்­க­ளையும் காண­மு­டி­வ­தில்லை. அத்­துடன் நான் மட்­டுமே மிகவும் வயது குறைந்த ஒரு தமிழ் வெற்­றி­யா­ள­ரா­கவும் காணப்­பட்டேன். இனி­வரும் காலங்­களில் இன்னும் பல வெற்­றி­யா­ளர்­களை காண­மு­டியும் என நினைக்­கின்றேன்.
 
கேள்வி:- இலத்­தி­ர­னியல் வர்த்­த­கத்­து­றையில் நீங்கள் எவ்­வாறு ஆர்வம் காட்­டி­னீர்கள் அல்­லது இத்­து­றையில் ஈடு­பட்­ட­மைக்­கான நோக்கம் பற்றி கூற­மு­டி­யுமா?
 
பதில்:- 2007ஆம்­ ஆண்­டு ­காலப் பகு­தியில் Srilanka Institute of Information Technology  இல் Bsc in IT படிக்­கும்­போது எனக்கு இலத்­தி­ர­னியல் வர்த்­தகம், இலத்­தி­ர­னியல் சந்­தைப்­ப­டுத்தல் சம்­பந்­த­மாக ஈடு­பாடு தோன்­றி­யது. ஆனால் அப்­போது இருந்த பொரு­ளா­தார நிலை கார­ண­மாக என்னால் மேற்­கொண்டு படிக்க இய­ல­வில்லை.
 
அதற்குப் பின் நான் வவு­னியா வந்து எனது தமை­யனார் உத­வி­யுடன் ரூ.43,200 இற்கு Pentium4 ரக மேசைக்­க­ணினி ஒன்றை இலகு தவணை முறையில் கட­னாக வாங்­கினேன்.
 
அதையே எனது ஆரம்ப மூல­த­ன­மாக வைத்து எனது படிப்­பினை இணைய வழியில் ஆரம்­பித்தேன் கடந்த ஐந்து வரு­டங்­களில் எனது நிறு­வ­னத்தின் சந்­தைப்­பெ­று­மதி 450,000 அமெ­ரிக்க டொலர்­க­ளாக உயர்ந்­துள்­ள­துடன் 40 இற்கும் அதி­க­மான இலங்­கை­ய­ருக்கும் பல சர்­வ­தேச இணைய தொழி­லா­ளர்க­ளுக்கும் வேலை­வாய்ப்­பினை வழங்கும் பாக்­கியம் எனக்கு கிடைத்­தது.
 
இலங்­கையின் அந்­நி­யச்­செ­லா­வணி வரு­மான ஈட்­டலில் எனது நிறு­வ­னத்தின் சிறு பங்­க­ளிப்பும் உள்­ளது என்­பதில் எனக்கும் எனது சக தொழி­லா­ளர்­க­ளிற்கும் மகிழ்ச்சி.
நான் அவ்­வ­ள­வாக படித்­தவன் அல்ல நான் எல்­லா­வற்­றையும் எனது வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டமும் இலத்­தி­ர­னியல் கற்­கை­மு­றையின் மூல­முமே கற்­றுக்­கொண்டேன். அதிகம் படிக்­காத என்னால் இவ்­வா­றான ஒரு நிறு­வ­னத்­தினை நடத்தி பல­ பேருக்கு வேலை­வாய்ப்பை வழங்க முடி­கி­றது என்றால் நன்கு படித்த சமூ­கத்­தினால் இன்னும் நிறைய வேலை வாய்ப்­புக்­களை உரு­வாக்கிக் கொடுக்க முடியும்.
 
இந்த வணி­கத்­தினை இங்கே இருந்து கொண்டு வெளி­நாட்டில் உள்ள இணைய பணி­யா­ளர்­களை வைத்து நடாத்த முடியும். ஆனால், வேலை­யற்ற கார­ணத்­தி­னாலே சக இளை­ஞர்கள் தடம்­மா­றிப்­போ­கின்­றார்கள், வீதி­களில் நிற்­கின்­றார்கள். முடிந்­த­வரை எல்­லோ­ருக்கும் தகுந்த வேலை கிடைக்கும் எனில் அதுவே ஒரு கிரா­மத்தின், நாட்டின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்கான தீர்­வாகும்.
 
 
கேள்வி:- உங்­க­ளது நிறு­வ­னத்தின் தன்மை, அத­னது செயற்­பாடு பற்றி கூற­மு­டி­யுமா?
 
பதில்:- தற்­போது மூன்று வெவ்வேறு வித­மான இலத்­தி­ர­னியல் வணிகம் சம்­பந்­த­மான நிறு­வ­னங்­களை நடத்தி வரு­கின்றேன். Extreme Seo Internet Solution என்­பது எனது பிர­தான நிறு­வனம். இவ்­வ­ணிகம் சம்­பந்­த­மான போதிய அறி­வி­னையும்,அதற்­கான தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சான்­றி­தழ்­க­ளையும் என்னால் பெற்­றுக்­கொள்ள முடிந்­தது அவற்றில் சில,
 
1. Certified Seo Consultant
 
2. Certified Google Analytics Individual
 
3. Google Adwords Qualified Individual
 
இதன் மூலம் என்னால் சக­ப­ணி­யா­ளர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கவும் விடு­முறை நாட்­களில் இணைய கருத்­த­ரங்­குகள், தனியார் பயிற்­சி­களை உள்ளூர் மற்றும் சர்­வ­தேச மாண­வர்­க­ளுக்கு வழங்கவும் முடி­கின்­றது.
 
வியா­பாரம் என்றால் அது ஒரு தொழில் ரீதி­யி­லான உற­வு­முறை. அதை எப்­படி நாம் நேசிக்­கின்றோம், அணு­கு­கின்றோம் என்­ப­தனைப் பொறுத்தே அதன­து வெற்­றி, தோல்வி தங்­கி­யுள்­ளது.
 
ஒவ்­வொரு நிறு­வ­னத்­திலும் ஒரு புனிதத் தன்­மையை பேணு­வார்கள். அதே போல் எனது நிறு­வ­னத்தில் ஒழுக்­கத்­திற்கு மிகவும் முக்­கி­யத்­துவம் அளிக்­கின்றேன். எனது சக­ப­ணி­யா­ளர்­களின் நலனில் கூடு­த­லான அக்­கறை செலுத்தி முடிந்­த­வரை அவர்­க­ளுக்கு தகு­தி­யான ஒரு சக­ ப­ணி­யா­ள­னா­கவும்,வாடிக்­கை­யாளர்­க­ளுக்கும், சமூ­கத்­திற்கும் மிகவும் பிடித்த ஒரு நிறு­வ­ன­மாக இந்­நி­று­வ­னத்­தினை நடத்தி வரு­கின்றேன்.
 
2008 ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் எனக்கு 5 அமெ­ரிக்க டொல­ருக்கு வேலை தந்த வாடிக்­கை­யாளர் இப்­போது எனது தொடர் வாடிக்­கை­யா­ள­ராக இருக்­கின்றார்.
 
எமது நிறு­வ­னத்தில் வாடிக்­கை­யா­ளர்­களின் தேவை­யினை பரி­சீ­லித்து அதன் பின்னர் அவர்­க­ளுக்கு மிகவும் சரி­யான ஒரு தீர்­வினை சரி­யான நேரத்தில் மிகவும் நேர்த்­தி­யான முறையில் வழங்­கு­வதன் மூலம் எம்மால் வாடிக்­கை­யா­ளர்­க­ளது நன்­ம­திப்­பினை இல­குவில் பெற்றுக் கொள்ள முடி­கின்­றது.
 
கேள்வி:- நீங்கள் எதிர்­கா­லத்தில் எவ்­வா­றான திட்­டங்­களை செயற்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளீர்கள்?
 
பதில்:- கடந்த ஐந்து வரு­டங்­களில் எமது நிறு­வ­னமும் நானும் எமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கும், சக­ப­ணி­யா­ளர்­க­ளுக்கும் பிடித்த மாதி­ரி­யா­கவே செயற்­பா­டு­களை நடத்தி வரு­கின்றோம். இது ஓர் இலத்­தி­ர­னியல் வர்த்­தகம். இதற்கு நாம் வங்­கி­யி­டமோ, அர­சாங்­கத்­தி­டமோ உத­வி­யினை எதிர்­பார்க்க முடி­யாது.
 
அதேபோல் நாம் செல்லும் பாதை அல்­லது வீதி மிகவும் பழுது அதை அர­சாங்கம் செய்­யட்டும் என்று விட்டு செல்­வது எனது வழக்கம் இல்லை. வியா­பாரம் என்று மட்டும் அல்­லாது எம்மால் முடிந்­த­வரை சமூ­கத்­திற்கும், இவ்­வு­ல­கிற்கும் நல்­லது பயக்­கு­மா­ன­தான திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கிறோம். அவற்றில் சில­தான Eco friendly Business and Green Environment office premise, அத்­துடன் சமூகம், கல்வி, கிராமம், நாடு சம்­பந்­த­மான விழிப்­பு­ணர்வு முயற்சி மற்றும் பல. யாழ்ப்­பா­ணத்தில் கிளை நிறு­வ­னத்­திற்­கான இடம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இன்னும் சில மாதங்­களில் அதை ஆரம்­பிப்­ப­தாக உள்ளோம்.
 
இவ்­வ­ருட முடி­விற்குள் கொழும்­பிலும் மற்­றொரு கிளை­யை ஆரம்­பிக்­க­வுள்ளோம். எமது நிறு­வ­னத்தை பெரும்­பா­லான வாடிக்­கை­யா­ளர்கள், மீள்விற்­ப­னை­யா­ளர்கள் (Customers and Resellers) ஐக்­கிய அமெ­ரிக்க இராச்­சி­யத்தில் உள்­ளனர். அதனால் எமது நிறு­வ­னத்தை சட்­ட­பூர்­வ­மான ஐக்­கிய அமெ­ரிக்க நிறு­வ­ன­மாக தரப்­ப­டுத்­த­வுள்ளோம்.
 
அத்­துடன் இவ்­வ­ருட இறு­திக்­குள்ளே குறைந்­தது 70 மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கும்இ மேற்­ப­டிப்­பினை தொட­ர­மு­டி­யாத நிலையில் உள்ள இளை­ஞர்கள் இலத்­தி­ர­னியல் வர்த்­தகம், சந்­தைப்­ப­டுத்தல் தொடர்­பான கல்வி நிறு­வனம் ஒன்­றினை வட­மா­கா­ணத்தில் நிறுவி அதன் மூலம் பல பேருக்கு வேலை­ வாய்­ப்பினை உரு­வாக்கும் முயற்சி ஒன்றை கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் இருந்து ஆரம்­பித்­துள்ளேன்.
 
கேள்வி:- நீங்கள் எதிர் கொண்ட சவால்கள் பற்றி கூற­மு­டி­யுமா?
 
பதில்:- மனிதன் ஒவ்­வொரு நிமி­டமும் சவாலை எதிர் கொள்­கின்றான். நாம் சுவா­சிக்கும் மூச்­சுக்­கூட ஒரு சவால்தான் அதை நிறுத்­தினால் நாம் இறப்­பது உறுதி. எமது சுவா­சத்தில் கூட சளி அடைப்பு என பல வருத்­தங்கள் வரு­கின்­றன. இவற்­றை­யெல்லாம் நாம் எப்­படி தாங்கி சீர்­ப­டுத்­து­கிறோம் என்­பது போல தான் நாம் செய்யும் முயற்­சியின் பலன் உள்­ளது.
அதேபோல் என் பாதை­யிலும் சவா­லுக்கு குறை­வில்லை. அதை இறைவன் எனக்கு மிகவும் அதி­க­மா­கவே கொடுத்­துள்ளான் என்று சொல்­லலாம்.
 
ஆரம்­பத்தில் நான் பெற்ற துன்­பங்கள் தான் இன்­று­வரை என்னுள் இலக்கை நோக்கி செல்ல தூண்­டு­கி­றது.
 
சரா­சரி வர்த்­த­கர்கள் எதிர் கொள்ளும் பிரச்­சி­னை­க­ளான பொரு­ளா­தாரம், சமூகம்,சட்டம் இதுரோகம் என்று வில­கிய சக பணி­யா­ளர்­களும், புறம் கூறி­ய­வர்­களும் உண்டு. ஆனால் அதை­விட மேலாக என்­னையும், எனது நிறு­வ­னத்­தி­னையும் நேசிக்கும் சக பணி­யா­ளர்­களின் உத­வியால் முன்­பி­ருந்­த­தை­விட பல மடங்கு சிறப்­பாக நடத்த முடி­கின்­றது.
 
 
கேள்வி:- உங்­களைப் போன்று ஏனைய வளர்ந்­து­வரும் தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு நீங்கள் கூற­வி­ரும்­பு­வது என்ன?
 
பதில்:- தய­வு­செய்து வாய்ப்­பிற்­காக காத்­தி­ருக்க வேண்டாம். கிடைக்கும் வாய்ப்­பினை சரி­யான முறையில் பயன்­ப­டுத்திக் கொள்­ளுங்கள் அல்­லது சரி­யான வாய்ப்பு ஒன்­றினை உரு­வாக்கிக் கொள்ள முற்­ப­டுங்கள். மிகவும் தெளி­வான பாதை­யினை தெரிவு செய்து கொள்­ளுங்கள் அதுவே உங்­க­ளது தூர­நோக்கு. இதனை அடைய நீண்டகாலம் தேவைப்படும்.
ஆனால் மிகச் சரியான திட்டமிடலை நிறைவேற்றுவதன் (Right planning and perfect execution strategy) மூலம் அவ்விலக்கை சுலபமாக அடையமுடியும்.
 
பல வணிகங்கள் தங்களின் வசதிக்கு ஏற்ற முறையில் வணிகக்கொள்கைகளை அமைக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் சகபணியாளர்களுக்கும் தேவையான விடயங்களை கருத்திற்கொள்வதில்லை. இதுவே ஒரு வர்த்தகத்தின் பிரதான தோல்வியாகக்கூட அமையலாம்.
 
சிக்கல்கள், தோல்வி என்பது நீங்கள் அவற்றை அணுகும் விதத்திலேயே உள்ளது. ஆகவே ஒவ்வொரு முடிவுகளையும்சரியான முறையில் தெரிவு செய்து அவற்றில் வரும் பிரச்சினைகளை ஒரு பரீட்சையாக அல்லது சவாலாக எடுப்பது நன்று.
முடிந்தவரை ஒரு சக தொழிலாளனாக உங்கள் சக பணியாளர்களுக்கும், சிறந்த ஒரு வழங்குனராக உங்களது வாடிக்கையாளருக்கும், நல்லதொரு பிரஜையாக உங்கள் நாட்டிற்கும் இருப்பதன் மூலம் ஒரு சிறந்த முயற்சியாளனாக வரமுடியும்.

Post a Comment

0 Comments