Subscribe Us

header ads

முதலாவது இருபது20 போட்டியில் இந்தியாவை வென்றது இலங்கை மகளிர் அணி

இந்திய மகளிர் அணியுடனான முதலாவது இருபது20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 3  விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

இந்திய மகளிர் அணியுனான ஒருநாள் தொடரில் 3:0 விகிதத்தில் தோல்வியுற்ற நிலையில் முதலாவது இருபது20 போட்டியில் இலங்கை அணி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத்தின் விஜயநகரத்தில்  இன்று இப்போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி  20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவி மிதாலி ராஜ் 47 பந்துகளில் 67 ஓட்;டங்களைப் பெற்றார். ஹர்மன்ப்ரீத் கௌர், ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றார்.
 
இலங்கை பந்துவீச்சாளர்களில்  ஒஷாதி ரணசிங்க 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய  19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை மகளிர் அணியின் தலைவி சசிகலா சிறிவர்தன 39 பந்துகளில 57 ஓட்;டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். சர்வதேச இருபது20 போட்டிகளில் அவர் முதலாவது அரைச்சதம் இதுவாகும்.

சாமரி ஜயங்கினி 20 பந்துகளில 21 ஓட்டங்களையும்  சாமரி பொல்கம்பொல 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல 19 ஓட்டங்களையும் ஒஷாதி ரணசிங்க 17 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments