Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: ஜனவரி 15

1559 : முதலாம் எலிஸபெத் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார்

1582 : லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை போலந்திடம் ரஷ்யா  கையளித்தது.

1609 : உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான யுஎளைய Avisa Relation oder Zeitung  ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.

1759 : பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

1892 : ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.

1908 : யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1919 : அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1919 : ஜெர்மனியின் இரு சோசலிஸ்டுகளான ரோசா லக்சஸம்பேர்க், மற்றும் கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

1936 : முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட  முதல் கட்டடம் அமெரிக்காவின் ஒஹையோவில் நிர்மாணிக்கப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் தீவான குவாடல்கனாலில் இருந்து விரட்டப்பட்டனர்.

1943 : அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் திறக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய  உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டடமாகும்.

1944 : ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற பூகம்பத்தால் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1966 : நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவா என்பவாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

1969 : சோயூஸ் 5 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு ஏவியது.

1970 : நைஜீரியாவிடம் இருந்து சுதந்திரம் கோரி போராடிய பயாஃப்ரா பிராந்தியம்  32 மாத  போரின் பின்னர் சரணடைந்தது.

1970 : முவம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தெரிவானார்.

1975 : போர்த்துக்கலிடமிருந்து அங்கோலா சுதந்திரம் பெற்றது

1973 : வடக்கு வியட்நாம் மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்ஸன் அறிவித்தார்.

1977 : சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்

2001 : விக்கிப்பீடியா இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.

2005 : ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமினியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.


2007 : ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

2009: அமெரிக்காவின் யூ.எஸ். எயார்வேஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமொன்று கோளாறு காரணமாக ஹட்சன் நதியில் இறக்கப்பட்டது. இதில் பயணித்த பயணிகள்,  ஊழியர்கள் உட்பட 150  பேரும் தப்பினர்.

Post a Comment

0 Comments