Subscribe Us

header ads

பெப்ரவரி 1 ஆம் திகதி ஹிஜாப் தினம்

ஹிஜாப் அணிவது குறித்த தவறான புரிதல்களை களைவதற்காக பிப்ருவரி1-ஆம் தேதி ஹிஜாப் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஹிஜாபின் சிறப்புகளைக் குறித்து விவாதிக்கும் பெண்கள் குழுவினரின் ஃபேஸ்புக் குழுமம் ஹிஜாப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. ஹிஜாப் அணிவதை ஊக்குவிப்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ஹிஜாப் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

‘ஹிஜாப் எனது தலையைத்தான் மறைக்கிறது! அறிவை மறைக்கவில்லை! அது கண்ணியத்தை வெளிப்படுத்துகிறது’ என்று ஜெர்மனியைச் சார்ந்த வர்தா முஹம்மது கூறுகிறார். நியூயார்க்கைச் சார்ந்த நஸ்மா கான் ஹிஜாப் தினம் என்ற சிந்தனையை முதல் முறையாக முன்வைத்தார். 22 மொழிகளில் இவர்களுடைய சிந்தனை பரப்புரை செய்யப்படுகிறது.


Post a Comment

0 Comments