(அபுதாபியிலிருந்து எம்.எம்.நொளபர்)
ஐக்கிய அரபு இராஜ்யத்தின் (United Arab Emirates) 42ஆவது தேசிய தினம் இன்று அனுஷரிக்கப்படுகிறது.
இவ்வருட தசிய தினத்தை முன்னிட்டு இராஜ்யத்தின் பல்வேறு
பகுதிகளிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய கட்டிடங்கள் மலர்கள் மற்றும்
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அமீரக மக்கள் மட்டுமன்றி இலங்கையர்கள் உள்ளிட்ட
வெளிநாட்டவர் பெரும்பாலோர் தங்களது வாகனங்களில் அமீரக தேசியக் கொடியை பறக்க
விட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராஜ்யம் 42 ஆண்டுகளுக்கு முன்னர் அபுதாபி,
துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், புஜைரா மற்றும் ராசல் கைமா ஆகிய 7 இராஜ்யங்களாக
தனித்தனியான நிர்வாகக் கட்மைப்புளைக் கொண்டு இயங்கி வந்தன. 1971ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் ராசல் கைமா தவிர்ந்த 6 நாடுகள் சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான் அவர்களின் தலைமையில் ஒன்றினைந்து ஐக்கிய அரபு இராஜியங்கள் உருவாக்கப்பட்டது. 1972ம் ஆண்டு ராசல் கைமா ஐக்கிய அரபு இராஜ்யத்துடன் இணைந்தது
கொண்டது.
இந்நிகழ்வே ஐக்கிய அரபு இராஜ்யத்தின் தேசிய தினமாக்
கொண்டாடப் படுகின்றது.


0 Comments