Subscribe Us

header ads

மகரகமவில் மூன்று மாடிகளைக் கொண்ட அஹதியா பாடசாலை

(அஷ்ரப் ஏ.சமத்)
மகரகம மாநகர சபைத் தலைவர் காந்தி கொடிக்கார் அடிக்கல் நாட்டினார். அவரது கணவராண மேல்மாகாண சபை அமைச்சர் உபாலி கொடிக்கார 5 இலட்சம் நிதி ஒதுக்கீடு.

மகரகம அசார் பிரதேசத்தில் உள்ள அசார் ஜூம்ஆப் பள்ளிவாசலிக் அருகில் 3 மாடிகளைக் கொண்ட அஹதியா பாடசாலைக்கான கட்டிடத்திற்காக இன்று அடிக்கல் நாட்டி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக அமைச்சின் மேற்பார்வை உறுப்பினருமாண ஏ.எச்.எம். அஸ்வர், மேல்காண சுகாதார மற்றும் மத விவகார கலாச்சார அமைச்சர்  கொடிக்கார மகரகம நகர சபைத் தலைவர் திருமதி காந்தி கொடிக்கார மற்றும் கலாநிதி ஹாரிஸ்தீன் மகரகம நகர சபை உறுப்பினர் நிசந்த விமலரத்தின ஆகியோறும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரவித்தாவது –
இப் பிரதேசத்தில் தீன் வாஸ் எனும் எனது மாமினார் 72 வருடங்களுக்கு முன்பு கொள்ளுப்பிட்டியிலிருந்து பள்ளி லேனிலிருந்து  வந்து மகரகமவில் ; குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்கள். இப் பிரதேசத்தில் 72 வருடங்களாக முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். கபூர் ஹாஜியாரின் தோட்டமே மகரகம கபூரியா அரபுக் கல்லூரியாகும். 50 வருடங்களுக்கு மேலாக இவ் இஸ்லாமியப் பாடசாலையில் இயங்கி வருகின்றது.

அசாரிய பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள காணியில் வாகணத்தரிப்பிடமும் மற்றும் தூர இடங்களில் இருந்து மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வருபவர்கள் தமது வாகணங்களை தரிப்பதற்கும் இக்கட்டிடத்தில் வசதிசெய்து கொடுக்கப்படும். பள்ளிவாசலில் அகதியாப்பாடசாலையை இக் கட்டிடத்தில் நடாத்துவதற்குமே இக் கட்டிடம் இன்று ஆரம்பித்து வைகக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்தில் வாழும் பௌத்த மக்களோடு அன்று தொட்டு இன்று வரை எம்மோடு இணைந்து ஜக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். இப் பிரதேசத்தில் வாழும் முஸ்லீம்கள் வெசாக் காலங்களில் மற்றும் பௌத்த பண்சாலைகளில் நடைபெறும் சகல விசேட வைபவங்களுக்கு மர் ஹூம் தீன்  வாஸ் உதவி வந்தார். அதே போன்று பௌத்த மக்களும்  இன்றுவரை இப்பிரதேச முஸ்லீம்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி அளித்த மகரகம நகரசபைத் தலைவி திருமதி கொடிக்காரவுக்கும் அவரது கணவர் மேல்மாகாண அமைச்சர் உபாலி கொடிக்காரவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் பள்ளிவாசல் சார்பாக நன்றியைத் தெரிவித்தார்.


இங்கு உரையாற்றிய மேல்மாகாண அமைச்சர் கொடிக்கார – அகதியாப் பாடசாலை மாணவர்கள்  நல்ல விடயங்களே  இங்கு பயிலுகின்றனர். எமது ஜனாதிபதி தலைமையின் கீழ் இன மத வேறுபாடு கிடையாது. இக் கட்டிடத்திற்காக எனது அமைச்சின் ஊடாக 5 இலட்சத்தை ஓதுக்கித் தருவதாகவும் அங்கு உறுதியளித்தார்.




Post a Comment

0 Comments