(VK)
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக
வலயத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அழகுசாதனப்
பொருட்களை விற்பனை செய்யும் கடையில் புத்தரின் உருவ சித்திரம் கொண்ட
கையுறைகளை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பாக ஆத்திரம் கொண்ட
பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் முஸ்லிம் கடையில் பிரித் ஓதி
வியாபாரியை பொதுமன்னிப்பு கோரச் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள குறித்த
வர்த்தக நிலையத்தில் பெண்கள் அணியும் நீண்ட கையுறைகளில் புத்தரின்
உருவ சித்திரம் இருந்துள்ளது. இந்த கையுறையை அணிந்தால் கைகளில் பச்சை
குத்தியது போல் தெரியும்.
இது தொடர்பாக அறிந்து கொண்ட பௌத்த மதகுருக்கள் உட்பட சிலர் அண்மையில்
இந்த கடைக்குச் சென்று ஏற்படுத்திய பிரச்சினையை அடுத்து அந்த கடையை
சில தினங்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வர்த்தகர் கடையை மீண்டும் திறக்க
முற்பட்ட போது பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் கொண்ட குழுவினர் அந்த
முஸ்லிம் கடையின் முன்பாக பிரித் ஓதும் ஒலி நாடாவை ஒலிக்கவிட்டனர்.
இதன் போது அந்த கடையிலும் அயலிலும் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டமை
ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் அந்த வர்த்தக நிலையம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்ட பிக்குகளும் பொது மக்கள் சிலரும் பின்னர்
அருகிலுள்ள விகாரைக்குச் சென்றனர்.
இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த
சம்பவம் இடம்பெற்றது. இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் பொது
பலசேனா அமைப்பினர் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

0 Comments