ஓட்டுநர் இல்லாது ரயில் என்ஜின் ஒன்று தெமட்டகொடவில் இருந்து கல்கிஸ்ஸை வரை
பயணித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் இறுதி
அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கையின்படி ரயில் புற இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்
ஆகியோரின் தவறே ரயில் தனியே பயணித்தமைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
குறித்த ரயில் என்ஜின் டிசம்பர் 05ம் திகதி அதிகாலை 1.45 அளவில் தானியங்கி
கல்கிஸ்ஸை வரை சென்று கொண்டிருந்த போது மறித்து நிறுத்தப்பட்டதாக மத்திய
ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
எனினும் இதனால் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லை.
(அத தெரண )

0 Comments