Subscribe Us

இலங்கைப் பெண்கள் விரும்புவதில்லை.

‘மகளிர் மட்டும்’ பஸ்ஸில் பயணம் செய்ய இலங்கைப் பெண்கள் விரும்புவதில்லை. எனவே இலங்கை பஸ்களை அறிமுகம் செய்யும் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் கூறினார்.

அண்மையில் நான் ரயிலில் பயணித்தபோது பெண்களுக்கென தனியாக பெட்டிகளை ஒதுக்க வேண்டுமா என கேட்டபோது அவர்கள் தாம் தனித்து பயணிக்க விருப்பவில்லை என கூறினர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகையால் ‘மகளிர் மட்டும்’ ரயில் பெட்டித்திட்டத்தையும் கைவிட்டு விட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார் .

ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெல்கம சில பெண்கள் ‘மகளிர் மட்டும்’ பஸ்ஸில் பயணிக்க விரும்புவதில்லை என தனக்கு நேரில் தெரிவித்ததாக நாடாளுமன்றில் கூறினார்.

‘மகளிர் மட்டும்’ பஸ் சேவை சில பெண்கள் கூறுகிறார்கள் என்ற காரணத்தை முன்வைத்து அமைச்சர் திட்டத்தை  கைவிடுவது சரியான தீர்மானமாக அமையாது  . குறித்த சேவை நடைமுறையில் உள்ள தடைகள் கண்டறியப் பட்டு அவை நிவர்த்தி செய்யப்படல் வேண்டும்  . நாட்டில் பெண்கள் அதிகம்  பயணங்களில் போது  பாலியல் மற்றும் ஏனைய துன்புறுத்தல்களுக்கு இலக்காவதாக ஆய்வுகள் குறிப்பிடுகிறது .

நமது அயல் நாடான இந்திய போன்ற நாடுகளில் ‘மகளிர் மட்டும்’ பஸ் சேவை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளமை  சுட்டிக்காட்டத்தக்கது .

Post a Comment

0 Comments