Subscribe Us

2014-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து: வெளியானது டிரா (Fixtures)... ஒரே பிரிவில் ஸ்பெயின் மற்றும்...

2014-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒரே பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் அடுத்த ஆண்டு (2014) ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 13-ந்தேதி வரை நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் பிரேசில், நடப்பு சாம்பியன் ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன. பிரேசில் தவிர மற்ற 31 அணிகளும் தகுதி சுற்று மூலமே பிரதான சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் அணிகள் எந்தெந்த பிரிவில் (8 பிரிவு) இடம் பெறுவது, யார்-யாருடன் மோதுவது என்பதை நிர்ணயிக்கும் குலுக்கல் முறை (டிரா) நேற்று பிரேசிலின் பாயாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக மறைந்த தென்ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சியுடன் குலுக்கல் நடைபெற்றது. இதன் முடிவில் ஏ பிரிவில் போட்டியை நடத்தும் பிரேசில் இடம் பெற்றுள்ளது.

டி பிரிவில் உருகுவே, கோஸ்டா ரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய பலம் வாய்ந்த அணிகள் இடம் பிடித்துள்ளதால் இந்த பிரிவு ‘குரூப் ஆப் டெத்’ என்று அழைக்கப்படும். இதே போல் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், கடந்த முறை 2-வது இடம் பிடித்த நெதர்லாந்து, சிலி,ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை கொண்ட ‘பி’ பிரிவும் சவால் நிறைந்ததாக அமையும்.


பிரிவுகள் விவரம்

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் விவரம் வருமாறு:-





ஏ பிரிவு: பிரேசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன்


பி பிரிவு: ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா


சி பிரிவு: கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான்


டி பிரிவு: உருகுவே, கோஸ்டா ரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி


இ பிரிவு: சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோன்டுராஸ்


எப் பிரிவு: அர்ஜென்டினா, போஸ்னியா-ஹெர்சகோவினா, ஈரான், நைஜீரியா


ஜி பிரிவு: ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா


எச் பிரிவு: பெல்ஜியம், அல்ஜீயா, ரஷியா, கொரியா.


தொடக்க நாளான ஜூன் 12-ந்தேதி ஐந்து முறை சாம்பியனான பிரேசிலும், குரோஷியாவும் சாவ் பாவ்லோ நகரில் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி முதல் சவாலை நெதர்லாந்துடன் (ஜூன் 13-ந்தேதி) தொடங்குகிறது. முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி ஜூன் 16-ந்தேதி போர்ச்சுகல்லை சந்திக்கிறது.

 

Post a Comment

0 Comments