மேல் மகாண ஆளுநர் அலவி மௌலானா இலங்கை, பௌத்த சிங்கள நாடு என்பதனை
மறந்து செயலாற்றி வருகிறார். கடந்த ஹஜ் பெருநாள் பருவத்தில்
மாடறுப்பதை தர்மம் (பிங்கம )எனக் குறிப்பிட்டு அதற்கு இடையூறின்றி
ஒத்தாசை வழங்குமாறு உள்ளூராட்சி மனறங்களிடம்
கேட்டுக்கொண்டிருந்தார்.பௌத்த நாட்டில் மாடறுப்பை எவ்வாறு
தர்மமாகக் கருதமுடியும்?ஆகவே ஆளுநர் அலவி மௌலானா
அடிப்படைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்படுகிறார் என
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்
குறிப்பிட்டாரர்.
நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்துத்
தெரிவிக்கையில், இலங்கை பௌத்த தர்மத்தைப் பாதுகாக்கும் நாடு என
ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அந்த பௌத்த நாட்டிலேயே அவருடைய
பிரதிநிதியான ஆளுநர் மாடறுப்பை தர்மம் எனக்குறிப்பிட்டு பௌத்த
தர்மத்தை சீரழிக்கிறார்.ஆகவே இந்த அரசாங்கம் ஒரு புதுமையான
அரசாங்கமாகும்.எந்தவொரு பொறுப்புக்கூறும் கடப்பாடும் இல்லை.
சில அமைச்சுகளில் , திணைக்களங்களில் சிங்களவர்களுக்கு வேலை
கொடுப்பதில்லை.ஒரு கடிதம்கூட பெற முடியாத
நிலையுள்ளது.புலமைப்பரிசில் மூலம் வெளி நாடு சென்று வந்த சிலர்
இங்குள்ள பௌத்தர்களை வேறு வழியில் திசை திருப்ப முனைகிறார்கள்.இவற்றை
பௌத்த விவகார அமைச்சு கண்டுகொள்வதில்லை. ஆகவே பௌத்த விவகார அமைச்சரை,
அமைச்சை விட்டு வீட்டுக்குப் போகச் சொல்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.


0 Comments