Subscribe Us

விபத்துகளை தடுப்பதற்காக அன்னதானம் வழங்கிய சாரதிகள் (படங்கள் இணைப்பு)

(நன்றி : மெட்ரோ)

முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பத்துளுஓயா பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பகல் அன்னதான நிகழ்வொன்று இடம்பெற்றது.

 இப்பிரதேசத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் தெய்வ ஆசி வேண்டி பத்துளுஓயா 61வது சந்தி சதாசரண முச்சக்கர வண்டிச் சங்கத்தினர் இந்த அன்னதாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். .
 
இப்பிரதேசத்தில் அதிகரித்துச் செல்லும் வீதிவிபத்துக்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதற்கும், இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு ஆசி வேண்டியும் இந்த அன்னதான நிகழ்வு
இடம்பெற்றது. முந்தல் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

 

Post a Comment

0 Comments