Subscribe Us

நிலவில் பயிரிடவுள்ள நாஸா (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையம் 2015 ஆம் ஆண்டில் நிலவில் பயிரிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
 
மனிதன் பூமியைத் தவிர வேறு கிரகங்களில் வாழ முடியுமா? என பல்வேறு
ஆராய்சிகள் நடந்துகொண்டுள்ளன. இந்நிலையில் நிலவில் மனிதன் உயிர் வாழ முடியுமா என ஆராய்ச்சி மேற்கொள்ளவே பயிரிட்டு சோதனை நடத்த நாஸா திட்டமிட்டுள்ளது.
 
இத்திட்டத்தினை விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் குழுவொன்றின் நிலவின் ஈர்ப்பு மற்றும் கதிரியக்கத்தில் தாவரங்களை வளர்கக முடியுமா என கண்டறியும் கற்கைக்கான சிறிய பகுதியினர் உருவாக்குகின்றது.

 2015 ஆம் ஆண்டுக்கான கூகுள் லுனார் எக்ஸ்-பிரைஸ் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள வணிக விண்கலத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
 
இவ்விலத்தினை 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிலவில் தரையிறக்கி அனுப்படும் விதைகளை 5-10 நாட்கள் வரையில் பூமியில் வளரும் விதைகளுடன் ஒப்பீடு செய்யப்படும் இதன் பின்னரே விதைகளுக்கு நீர் வழங்கப்படும். நாற்று உருவாக்கப்படும்.
 
பூமி தவிர வேறு கிரகத்தில் தாவரம் பயிரிடப்படும் முதல் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது. ஏற்கனவே செய்வாய் கிரகத்தில் விவசாயம் மேற்கொள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாராகியுள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டளவிலேயே செவ்வாய்க்கு செலுத்தப்படவுள்ளது.
 
தாவரங்களை பயிரிடும் திட்டம் குறித்து நாஸா கூறுகையில், தாவரங்கள் வளருவதற்கு மனிதனைப் போன்று நீர், காற்று, உணவு போன்றன தேவைப்படுகின்றன. விதைகளை அனுப்பி அவை நிலவில் வளர்ந்தால் மனிதர்கள் அங்கு வாழ முடியும்.

இதன் மூலம் புவியீர்ப்பு விசை அற்ற இடங்களில் பயிரிடும் தொடர்பிலான ஆராய்ச்சிகளும் வளர்ச்சியடையும் என நாஸா தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments