பேராதனை, கண்ணொருவ ரணபிம ரோயல் கல்லூரிக்கு ஆறாம் ஆண்டிற்கு மாணவர்களை
சேர்த்துக்கொள்வதற்கான பரீட்சை மத்திய மாகாண முதலமைச்சர் சரத்
ஏக்கநாயக்கவினால் தற்காலிகமான இடைநிறுத்தப்பட்டுள்ளது.இந்த கல்லூரியின் ஆறாம் ஆண்டிற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைக்குரிய வினாத்தாள்கள் திருட்டுத்தனமாக வெளியில் விற்கப்பட்டதை அடுத்தே முதலமைச்சரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற திறமையான மாணவர்களை ஆறாம் ஆண்டிற்காக புதிதாக சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்தது.
வினாத்தாள்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, வினாத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதனையடுத்தே நேர்முகப் பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

0 Comments