Subscribe Us

அமைச்சர் ரெஜினோல் குரேயின் மகள், விரிவுரையாற்றுகையில் மயங்கி விழுந்து மரணம்

(எம். எஸ். பாஹிம்)

சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல் குரேயின் மகள் நேற்று திடீரென மரண மடைந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென மயங்கி விழுந்துள்ளதோடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. 

மெய்யியல் முதுமாணிப் பட்டத்திற்கு தயாராகி வரும் இவர், அது தொடர்பான பரீட்சைக்காக சம்பவ தினம் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 

திடீரென நினைவிழந்து விழுந்த இவர் கொழும்பு பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகையில் நேற்று அதிகாலை மரணமடைந்தார்.

35 வயதான இவர் 3 பிள்ளைகளின் தாயாராவார். இவரின் இறுதிக் கிரியைகள் 5 ஆம் திகதி கடுகுருந்தவில் நடைபெறும்.

நன்றி:ஜப்னா முஸ்லிம்

Post a Comment

0 Comments