புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு புதிதாக கல்வி அமைச்சால் பொது சேவை
ஆணைக்குழுவின் அனுமதியின்படி நியமிக்கப்பட்ட அதிபர் சேவை தரம் ஒன்றைச்
சேர்ந்த அதிபரை புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளின் அடியாட்கள்
பதவியேற்கவிடாமல் தடுப்பதாகவும் இந்நிலை தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை
எடுக்கப்போவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தற்போது பதில் அதிபர் ஒருவர்
கடமையாற்றி வருகிறார். இவருக்குப் பதிலாகவே அதிபர் சேவை தரம் ஒன்றைச்
சேர்ந்த புதிய அதிபரொருவரை கல்வி அமைச்சு நியமித்து அவரிடம் பொறுப்பை
ஒப்படைக்கும்படி கடந்த 12ஆம் திகதி கல்வி அமைச்சு கடிதமொன்றையும் பிரதி
அதிபருக்கு அனுப்பி வைத்திருந்தது.
ஆனால் இவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படாததுடன் ஸாஹிரா தேசிய பாடசாலையின்
பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவரின் வீட்டின் மீதும் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
.


0 Comments