(TM)கம்பனிகள் முரண்பாடு சபையின் தலைவராக சட்டத்தரணி பாத்திமா
சட்டத்தரணிகளான மீராசாஹிப் மஹ்ரூப், டப்ளியூ.ஏ.திலங்க வீரசிங்க, பீ.மானமடுவ மற்றும் சிராஸ் எம்.நூர்தீன் ஆகியோர் இந்த சபையின் உறுப்பினர்களாவர்.
புகழ்பெற்ற சட்டப் பின்னணியைக் கொண்ட பாத்திமா பையிஷா முஸ்தபா மாக்கர், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஷ் முஸ்தபாவின் மகளும் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் சகோதரரியுமாவார்.
சி.எம்.எஸ் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் லண்டன் பல்கலைக்கழகமொன்றில் வர்த்தகம் மற்றும் கம்பனி சட்டத்தில் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார்.இவர் பொதுநலவாய வர்த்தக பெண்கள் (இலங்கை) தலைமைத்துவ குழுவின் ஸ்தாபக அங்கத்தவராக உள்ளார்.
பாயிஷா முஸ்தபா மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கம்பனிகள் முரண்பாடு சபை கம்பனிகள் சட்டம் இலக்கம் 07ஃ2007 இன் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments