Subscribe Us

header ads

தவறுக்கு வருந்துகிறோம்: பரீட்சைத் திணைக்களம்

(VV)

க.பொ.த. (சா/த) பரீட்சையின் இறுதி நாளான நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விருப்பத்திற்குரிய பாடமாக குடியுரிமை கல்வி மற்றும் சமூக நிர்வாகம் பாடத்திற்கான பரீட்சையில் வினாத்தாள் பகுதி-II இல் 'இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக?' என்ற வினா கேட்கப்பட்ட வினா தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
 
அத்துடன் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த வினா தொடர்பில் பரீட்சை திணைக்களம் முஸ்லிம் சமூகத்திடம் கவலையினை வெளியிடுவதாகவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் ஏஸ்.முஹமட் தெரிவித்துள்ளார்.
 
இந்த கேள்வி ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் சரியாக இருப்பதாகவும் அந்த கேள்வியை தமிழ்மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் போது அல்லது தட்டச்சு செய்யும் போது போது தவறு இடம்பெற்றிக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
எனினும், இது தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி மூலமான குடியுரிமை கல்வி மற்றும் சமூக நிர்வாகம் வினாத்தாளில் இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு  முக்கியத்துவங்களை குறிப்பிடுக?' என்றே வினா கேட்கப்பட்டுள்ளது எனவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 
இந்த தவறுக்காக பரீட்சை திணைக்களம் முஸ்லிம் சமூகத்திடம் கவலையினை தெரிவித்துக் கொள்வதுடன் விசாரணைகளை மேற்கொள்ளும் என அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, குறித்த கேள்விக்கு விடை எழுதிய மாணவர்களுக்கு அதற்குரிய புள்ளி வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
.

Post a Comment

0 Comments