இலங்கையின் உள்ளூராட்சி அமைப்புகளின் அடிமட்ட அமைப்புகளில் ஒன்றான பிரதேச சபைகள் அமைப்பு 1987ல் தாபிக்கப்பட்டது. . . ஆரம்பத்தில் இதன் உறுப்புரிமையானது கிராமோதய சபைத் தலைவர்ளை உள்ளடக்கியதாகவும் பின்னர் பதவி வழிகாரணமாக உதவி அரசாங்க அதிபர்,உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாகவும் (உதாரணமாக கிராம சேவையாளர் போன்றோர்) உருவாக்கப்பட்டது.
1987ம் ஆண்டின் 15ம் இலக்க சட்டமூலம்
1987ம் ஆண்டின் 15ம் இலக்கப் பிரதேச சபைகள் சட்டமூலம் பிரதேசசபையின் அமைப்பு, தெரிவு, நோக்கங்கள், அதிகாரங்கள் செயற்பாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தின.
பிரதேச சபையின் நோக்கம்
உள்ளூராட்சி மட்டத்தில் நிர்வாக மாற்றம், அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக முடிவுகளை எடுத்தல், நடைமுறையில் பயனுறும் வகையில் மக்கள் பங்குபற்றுவதற்கு வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் பிரதேச சபை அமைப்பு தாபிக்கப்பட்டது.
கற்பிட்டி பிரதேச சபையும், தலைவர்களும்.
இவ்வாறே கற்பிட்டி பிரதேச சபையும் உருவானது. ஆரம்பத்தில் பட்டன சபையாக இருந்து 1990/1991 காலப்பகுதிகளில் கற்பிட்டி பிரதேச சபையாக தரம் உயர்த்தப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட சட்டத்தின் படி, பிரதேச சபைப் பிரதிநிதிகள் விகிதாசாரத் தேர்தல் மூலம் அதன் எல்லைக்குள் வசிக்கும் மக்களால் தெரிவுசெய்யப்படுவர். இதன்படி 14 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான முதலாவது பிரதேச சபைகளுக்கான தேர்தல் 1991 மே 1ம் திகதி நடைபெற்றது.
இத்தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கு ஐ. தே. க. வில் போட்டியிட்ட அல் ஹாஜ். எம். எச் மொஹம்மத் (உகது) அவர்கள் பிரதேச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் 1991 தொடக்கம்1996 வரை இருந்தது. தனது பதவிக்காலத்தில் தன்னால் இயன்ற சேவைகளை கற்பிட்டி மக்களுக்கும் அதை அண்டிய பிரதேச மக்களுக்கும் செய்தார்.
இதனைத் தொடர்ந்து 1996ல் நடைபெற்ற தேர்தலில் அப்போது இருந்த ஆளும் கட்சி (பொதுஜன ஐக்கிய முன்னனி) சார்பாக போட்டியிட்டு N.T.M தாஹிர் ( மாகாண சபை உறுப்பினர்) அவர்கள் கற்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். அவரது காலத்தில் குறிப்பிடதக்க பல சேவைகளை கற்பிட்டி மக்களுக்காக செய்துள்ளார்.
தொடர்ந்து 2002,2006,2011 களில் நடைபெற்ற தேர்களில் முறையே றியாஸ் (ஐ.தே.க), அன்சார் (ஐ.ம.சு.கூ) மின்ஹாஜ்((ஐ.ம.சு.கூ) ஆகியோர் தலைவராக தெரிவு செய்யபட்டார்கள்.
கடந்த 3 பிரதேச சபை தேர்தல்களின் முடிவுகள் பற்றிய சிறு தொகுப்பு
Kalpitiya Pradeshiya Sabha
| |||
2011
| |||
POLITICAL PARTY/ INDEPENDENT GROUP
|
VOTES OBTAINED
|
PERCENTAGE
|
SEATS
|
United People's Freedom Alliance
|
23093
|
0.6906
|
10
|
United National Party
|
6736
|
0.2014
|
3
|
Independent Group 6
|
3420
|
0.1023
|
1
|
People's Liberation Front
|
128
|
0.0038
|
0
|
Valid Votes
|
33,441
|
95.67%
| |
Rejected Votes
|
1,512
|
4.33%
| |
Total Polled
|
34,953
|
64.18%
| |
Registered Electors
|
54,458
| ||
Kalpitiya Pradeshiya Sabha
| |||
2006
| |||
POLITICAL PARTY/ INDEPENDENT GROUP
|
VOTES OBTAINED
|
PERCENTAGE
|
SEATS
|
UNITED PEOPLES FREEDOM ALLIANCE
|
18,204
|
57.39%
|
9
|
UNITED NATIONAL PARTY
|
8,127
|
25.62%
|
3
|
INDEPENDENT GROUP II
|
3,537
|
11.15%
|
1
|
DEMOCRATIC UNITY ALLIANCE
|
1,185
|
3.74%
|
1
|
Valid Votes
|
31,718
|
94.69%
| |
Rejected Votes
|
1,777
|
5.31%
| |
Total Polled
|
33,495
|
67.39%
| |
Regis. Electors
|
49,702
| ||
Kalpitiya Pradeshiya Sabha
| |||
2002
| |||
POLITICAL PARTY/ INDEPENDENT GROUP
|
VOTES OBTAINED
|
PERCENTAGE
|
SEATS
|
United National Party
|
23,430
|
78.21%
|
11
|
Peoples' Alliance
|
6,173
|
20.61%
|
3
|
Janatha Vimukthi Peramuna
|
224
|
0.75%
|
0
|
New Left Front
|
97
|
0.32%
|
0
|
Valid Votes
|
29,957
|
95.24%
| |
Rejected Votes
|
1,498
|
4.76%
| |
Total Polled
|
31,455
|
71.71%
| |
Regis. Electors
|
43,866
| ||
குறிப்பு: கடந்த 5 பிரதேச சபை தேர்தல்களிலும் கற்பிட்டி மக்களின் வாக்கு வீதம் சராசரியாக 60-70 வரை.
கற்பிட்டி பிரதேச சபைக்கு கற்பிட்டியில் இருந்து ஒரு தலைவர்.
எமது கற்பிட்டி பிரதேச சபைக்கு முதன் முதல் நடைபெற்ற தேர்தலில் மட்டும் தான் எம்மால் ஒரு தலைவரைத் தெரிவு செய்யமுடிந்தது. அதன் பின்னர் நடைபெற்ற நான்கு தேர்தல்களிலும் நாம் எமதுஊரில் இருந்து ஒரு தலைவரை தெரிவு செய்ய தவறிவிட்டோம். இதற்கெல்லாம் காரணம் யார் விட்ட பிழை?
கற்பிட்டி மக்கள் விட்ட பிழையா? கற்பிட்டி அரசியல்வாதிகள் விட்ட பிழையா? சுயநலத்துக்காக அரசியலில் காலடி வைக்கும் சுயநல அரசியல்வாதிகளா? சுயநலத்துக்காகவும், காசுக்கும் ஆசைப்பட்டு ஊரை காட்டிக்கொடுக்கும் அறிவிழிகளா? அரசியலே வேண்டாம் என ஒதுங்கிச் செல்லும் படித்த தலைமுறையா?
கற்பிட்டி பிரதேச சபைக்கு கற்பிட்டியில் இருந்து ஒரு தலைவரை கொண்டு வர கூடிய வாக்கு பலம் கற்பிட்டி மக்களுக்கு உள்ளதா? அப்படியானால் ஏன் கடந்தகாலங்களில் வெளிப் பிரதேச தலைமைகளுக்கு விட்டுக்கொடுக்கபட்டது? என பல கேள்விகளை எழுப்ப முடியும்.
கடந்த நான்கு பிரதேச சபை தேர்தல்களிலும் நாம் விட்ட தவறுகளை எப்போது சரி செய்வது ?
1991ல் நடைபெற்ற தேர்தல் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, அப்போது ஊருக்குள் அரசியல்வாதிகள் குறைவாக இருந்தமையால் மக்களை சரியாக வழி நடாத்தி எமது ஊரில் இருந்து ஒரு தலைவரை தெரிவு செய்ய முடிந்தது. அப்போது கற்பிட்டியில் இருந்த அரசியல் தலைமைகள் என்று பார்த்தால் M.H மொஹம்மத் (ஐ.தே.க) மற்றும் மர்ஹூம் அல். ஹாஜ் அன்வர் J.P ஆகியோர்.
1996ல் நடைபெற்ற தேர்தல்.
அன்று ஆட்சி பீடத்தில் இருந்த சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையாரின் தலைமயிலான பொதுஜன ஐக்கிய முன்னனி நன்கு திட்டமிட்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. அவ்வாறு கற்பிட்டி பிரதேச சபையும் அல் ஹாஜ் நவவி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அமோக வெற்றி பெற்றது. இதில் ஆளும் கட்சி சார்பாக கற்பிட்டியில் இருந்து கற்பிட்டி மக்களின் பேராதரவுடன் S.H.M சமான் அவர்கள் புதுமுக அரசியல் வாதியாக போட்டியிட்டு உதவி தலைவர் இடத்தை பிடித்தார். அநேக மக்களாலும் கவரப்பட்ட ஒரு தலைவராக அறிமுகமான போது மக்கள் அணி திரண்டனர். நிச்சயமாக கற்பிட்டி பிரதேச சபைக்கு இரண்டாவது தலைவரும் கற்பிட்டியில் இருந்து தான் உருவாகுவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப் பட்டது. எமது ஊரில் உள்ள சுயநல வாதிகள் ஊரை விற்று பிழைத்து வாழ்க்கை நடத்துபவர்கள், தாஹிரிடம் விலை போய், தாஹிர் கொடுத்த பணத்தையும், காணியையும் வாங்கி கொண்டு கற்பிட்டியில் உள்ள வறிய மக்கள் வாழும் பகுதிகளில் (வாழைத்தோட்டம்,சேதாவாடி) போன்ற பகுதிகளில் வாழும் மகளுக்கு 2Kg. அரிசியும் ஏனைய உணவு பொதிகளையும் கொடுத்து தாஹிருக்கு வாக்கு வாங்கிக் கொடுத்த வரலாறு தான் அன்று நாம் எமக்கான பிரதேச சபைத் தலைமையை இழக்க நேரிட்டது. காடுபவா பள்ளிக்கு முன் சமுர்த்தி அதிகாரி சகோதரர் லாபீர் வீட்டின் சுவற்றில் “2Kg. அரிசிக்கும் 1 ஏக்கர் காணிக்கும் ஊரைக்காட்டிக் கொடுக்காதே ...” என எழுதி இருந்த வாசகத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். முழுக்க முழுக்க ஊரை இரண்டாகி எமது ஊருக்கு கிடைக்கவேண்டிய தலைமைப் பதவியை கிடைக்க விடாது தடுத்தது சில சுயநலவாதிகள் அடங்கிய குழு ஒன்றே. இவர்களின் ஆட்டம் இன்று வரையும் இருக்கிறது.
இதில் ஐ.தே.க ஆதரவாளர்கள் முழுமையாக M.H மொஹம்மத் அவர்களை ஆதரித்து எதிர்க் கட்சி தலைவராக்கினர். ஆனால் அதற்குள்ளேயும் சில குழப்ப நிலை இருந்தது. கற்பிட்டியின் பொதுஜன ஐக்கிய முன்னனி சரியாக திட்டமிட்டு நெறிப்படுத்தி இருந்தால் சில புல்லுருவிகளுக்கு சரியான பாடம் புகட்டி இருந்தால். தாஹிரை விட சமான் அதிக விருப்பு வாகுகளை பெற்று தலைமைபீடம் ஏறி இருப்பார். இன்று சமான் புத்தளம் மாவட்டத்தின் ஒரு அரசியல் தலைமையாக இருந்திருக்க கூடும்.
தாஹிர் அவர்களின் அரசியலில் உள்ள எதிர்கால திட்டமிடல், தூரநோக்கு, அவரது சனகியமான காய் நகர்தல்கள் புரியாத சில முட்டாள்கள், தாஹிர் படிக்காதவர் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்த படித்த முட்டாள்கள் விட்ட பிழைதான் இன்று வரையும் நாம் அரசியலில் மாற்றான் தாய் மக்களாக நடாத்தப்படுவதற்க்குக் கரணம்.
தாஹிர் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த அரசியல் வாதி போல், நன்கு திறமையாக திட்டமிட்டு செயற்படக்கூடியவர் என்பதை 1996ல் நடைபெற்ற பிரதேச சபை தேர்தல்களிலே நிருபித்து இருந்தார். அவரது வளர்ச்சிக்கு காரணம் அவரது சனகியமான அரசியல் நகர்வுகள் தான்.
2002ல் நடைபெற்ற தேர்தல்.
தொடரும்...

0 Comments