Subscribe Us

header ads

சூதாட்டத்தில் தோல்வி: 8 வயது மகளை பந்தயம் வைத்த தந்தை

அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தனது 13 வயது மகளை பந்தயம் வைத்துத் தோற்றுப்போனதால் அச்சிறுமியை திருமணம் செய்துகொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ள சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,

அக்கிராமத்தில் வசிக்கும் சுகுமார் என்பவர் தனது அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகையில் இழந்தவற்றை மீளப் பெற வேண்டும் என எண்ணி 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் தன் மகளை பந்தயம் வைத்துள்ளார்.
அத்துடன் தன் மகளை வயது கூடிய அந்த வீட்டுக்காரருக்கு திருமணம் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

இந்நிலையில் அந்தச் சூதாட்டத்திலும் தோல்வியைத் தழுவவே மகளை திருமணம் செய்துகொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

சூதாட்டத்தில் வெற்றிபெற்ற நபருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, இது குறித்து தகவல் கசிந்ததும் திருமணத்தை இடைநிறுத்துமாறு மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments